ஆதார் அட்டையை 10 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ள ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அவற்றை அரசிதல்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆதார் அட்டை தாரர்கள் 10 ஆண்டுக்கு ஒருமுறை அதனை புதுப்பிக்க வேண்டியது அவசியம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தை சமர்பித்து ஆதார் அட்டையை புதுப்பிப்பது அவசியம்.
இதற்கு வசதியாக “மை ஆதார்” இணையத்திலும் மற்றும் செயலியிலும் “அப்டேட் டாக்குமெண்ட்” என்ற பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து ஆதார் மையங்களுக்கும் நேரில் சென்று ஆதாரை புதுப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் வழங்கப்பட்ட நாளில் இருந்து 10 ஆண்டுக்கு ஒருமுறை உரிய ஆவணங்களை அளித்து ஆதார் அட்டையை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.