காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பாரா பளு தூக்குதலில் தங்கம் வென்று இந்தியாவின் சுதிர் அசத்தியுள்ளார். இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.
22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காவில் கடந்த 28 ம் தேதி தொடங்கியது 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஆடவருக்கான பாரா ளு தூக்குதல் விளையாட்டில் ஹெவி வெயிட் பிரிவில் 212 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் சுதீர் சிங் முதலிடம் பிடித்து காமன்வெல்த் போட்டியில் சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.
நைஜீரியர் வீரரை விட 0-9 புள்ளிகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற நீளம் தாண்டுதல் இறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த முரளி ஸ்ரீ சங்கர் கலந்து கொண்டார் இறுதிப்போட்டியில் ஸ்ரீ சங்கர் தனது முதல் முயற்சியில் 7.60மீ தூரமும் இரண்டாவது முயற்சியில் 8.08மீ தூரமும் நீளம் தாண்டி இரண்டாம் இடம் பிடித்தார்.
காமன்வெல்த் வரலாற்றில் ஆண்கள் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் வீரர் ஆவார். காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரீ சங்கர் முரளி பெற்றார்.