ஜேஇஇ நுழைவுத் தேர்வு 25ம் தேதி நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியர்களுக்குகாண ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் உயர் கல்விக்காக நடப்பு கல்வி ஆண்டுக்கான பகுதி 1 ஜே.இ.இ முதன்மை தேர்வு 2022 கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு வருகிற 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் தேர்வு வருகின்ற 25ஆம் தேதி முதல் நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை தேதியை மாற்றி அறிவித்துள்ளது மேலும் இந்த தேர்வு நாட்களில் 500 தேர்வு மையங்களிலும் வெளிநாடுகளில் 17 நகரங்களில் நடக்கும். 6 லட்சத்து 29 ஆயிரத்து 778 பேர் இந்த இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
மாணவ மாணவியருக்கா என்ன ஹால் டிக்கெட் நேற்று முதல் www.jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தங்களது விண்ணப்ப எண் பிறந்த தேதி பயன்படுத்தி ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டால் 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.