இன்றைய காலகட்டத்தில் அநேக பேருக்கு முடி கொட்டுவது ஒரு பிரச்சனையாக உள்ளது இந்த பிரச்சனையை சரி செய்ய என்ன உணவுகள் சாப்பிடலாம் என நாம் கீழே பார்ப்போம்.
முடி உதிர்வை தடுக்க முடியை பராமரித்தல் மட்டும் போதாது சத்தான உணவுகளையும் சாப்பிட வேண்டும். என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் முடி உதிர்வதை தடுக்கலாம் என பார்ப்போம்.
முடி உதிர்வு என்பது ஆண் பெண் இருவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு விஷயமாகும் இன்றைய காலகட்டத்தில் முடியை பராமரிக்க நமக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. நாம் அன்றாட உண்ணும் உணவு வகைகளில் புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். நாம் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்யலாம்.
கேரட்:
கேரட்டில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகம் உள்ளது இது முடி உதிர்வதை தடுக்கிறது கேரட்டில் அதிக அளவு பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளது அதனால் முடி உதிர்வதை தடுத்து முடியை வலிமையாக வைக்க உதவுகிறது.
பீன்ஸ்:
பீன்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. இதனால் இது முடி உதிர்வை தடுக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் செய்யும்.
முட்டை:
முட்டையில் புரோட்டீன், வைட்டமின் பி12, இரும்பு சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதனால் முட்டையில் உள்ள சத்துக்கள் முடி உதிர்வை தடுக்க பயன்படுகிறது.
பசலைக்கீரை:
பசலைக் கீரையில் இரும்பு சத்து வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவு காணப்படுகின்றது. மேலும் பசலைக்கீரை தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியை தூண்ட உதவுகிறது. இது முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது.