தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியளர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணைய எஸ்.கே பிரபாக உத்தரவு விட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியளர்களுக்கு அவர் எழுதிய கடிதம். மாநிலத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவது குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து பெறப்பட்ட பட்டியல் அடிப்படையில் 2748 காலியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

அதிகப்படியான காலியிடங்கள் இருப்பதால் அவற்றை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசின் அறிவுறுத்தல்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றி எடுக்க வேண்டும்.

இதற்காக வட்டாட்சியர் அளவில் அக்டோபர் 10 ம் தேதியன்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் நவம்பர் 7 ஆம் தேதி எனவும் விண்ணப்பங்களை பரிசீரிப்பதற்கான இறுதி நாள் நவம்பர் 14ஆம் தேதியாகவும் நிர்ணயிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்து திறன் தேர்வு நவம்பர் 30ஆம் தேதியும் நேர்காணல் டிசம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடத்தப்பட வேண்டும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை வரும் டிசம்பர் 19ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

இதற்காக கடந்த 2020 ம் ஆண்டு அக்டோபர் 17 ம் தேதி வெளியிடப்பட்ட வருவாய் துறை அரசாணையை பின்பற்ற வேண்டும்.

எழுத்துத் தேர்வுக்கு 100 வார்த்தைகளுக்கு மிகாத வகையில் கிராமங்கள் குறித்த தகவல்கள், நில வகைபாடு, கிராம கணக்குகள் அல்லது மாவட்ட ஆட்சியர் முடிவு செய்யும் தலைப்பின் அடிப்படையில் ஒரு பத்தி எழுத அறிவுறுத்தப்பட வேண்டும் குறிப்பாக இந்த தேர்வில் இட ஒதுக்கீட்டுக்கான விதிகள் கவனமாக பின்பற்றப்பட வேண்டும்.

எனவே கிராம உதவியாளர் தேர்வுக்கான அனைத்து நடைமுறைகளையும் உரிய அறிவுறுத்தல்களையும் மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் வருவாய் நிர்வாக ஆணைய எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Click to Chat