ஒரு லிட்டர் தேள் நஞ்சின் விலை ரூ. 80 கோடி என்பது உங்களுக்கு தெரியுமா துருக்கியில் உள்ள தேள் இனப்பெருக்க ஆய்வகத்தில் தினமும் சுமார் இரண்டு கிராம் தேள் நஞ்சு எடுக்கப்படுகிறது. தேள்களை பெட்டியிலிருந்து வெளியில் எடுத்த பிறகு சிறு துளி நஞ்சை அவை வெளியில் இடும் வரை ஆய்வாளர்கள் காத்திருக்கின்றன.
பிறகு அதனை உறைய வைத்து பொடியாக்கி விற்பனை செய்யப்படுகிறது. துருக்கி ஆய்வகத்தில் சுமார் 2000 தேள்கள் உள்ளன. அதன் மூலம் கிடைக்கும் நஞ்சு உறைய வைத்து தூளாக்கி ஐரோப்பாவிற்கு அனுப்பப்படுகிறது.
தேளிலிருந்து எடுக்கப்படும் நஞ்சு அழகு சாதனப் பொருள்கள் நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகள் தயாரிக்க பயன்படுகிறது.
ஒரு தேளில் 2 மி.கி நஞ்சு உள்ளது. 300 அல்லது 400 தேளிளுருந்து 1கிராம் நஞ்சு எடுக்கப்படுகிறது.