காளையார்கோவிலில் மாமன்னர் மருது பாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாமன்னர் மருது பாண்டியர் நல அறக்கட்டளை, இந்திய செஞ்சிலுவை சங்கம், அரிமா சங்கம், தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை சைக்கிள் கிளப் இணைந்து மாமன்னர் மருது பாண்டியர் வளாகத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. மாமன்னர் மருது பாண்டியர் நல அறக்கட்டளை, சைக்கிள் கிளப் தலைவரும் இந்திய செஞ்சிலுவை சங்க துணை சேர்மன் நாகராஜன் தலைமை வைத்தார்.

மாமன்னர் மருது பாண்டியர் நல அறக்கட்டளை செயலாளர் நாகராஜன், பொருளாளர் செந்தில் குமார் முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை மாவட்ட தலைவர் அரிமா கஸ்பார் வரவேற்புரை ஆற்றினார். இந்திய செஞ்சிலுவை சங்க காளையார்கோவில் வட்ட தலைவர், வட்டாட்சியர் உமா மகேஸ்வரி இரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.

இந்திய செஞ்சிலுவை சங்க காளையார் கோவில் வட்ட சேர்மன் தெய்வீக சேவியர், வட்டத் துணை தலைவர் ஆரோக்கியசாமி, வட்ட செயலாளர் அலெக்சாண்டர் துரை, வட்ட பொருளாளர் ராமநாதன் வட்டாட்சியருக்கு புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியின் இரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வசந்த் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு உயிர் கொடுத்து உதவும் வகையில் தானாக முன்வந்து நன்கொடையாக இரத்தத்தை அளித்த கொடையாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

அரிமா சங்க நிர்வாகிகள் தலைவர் ஜேம்ஸ் சூசை, செயலாளர் மதியழகன், பொருளாளர் அமல்ராஜ், மாவட்ட தலைவர் கணேசன், காளையார்கோவில் ஒன்றிய கவுன்சிலர்கள் குருநாதன், பாண்டியராஜன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவ சண்முகம், தமிழக வணிக சங்கங்களின் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் மாவட்ட சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் நற்கீரன், கௌரவ தலைவர் ஆறுமுக தேவர், மாவட்ட செயலாளர் பழனி குமார், மாநிலத் துணை தலைவர் முத்துக்குமார், மாவட்ட அமைப்பாளர் சீனிவாசன் செட்டியார், மாவட்ட துணை தலைவர் விஜயகுமார், பொறியாளர் அணி தலைவர் பாலமுருகன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர் பாலா ஒன்றிய அமைப்பு செயலாளர் முத்துக்குமார் மாவட்ட இணை அமைப்பாளர் ஒன்றிய பொருளாளர் கண்ணன், நிர்வாக குழு துணை தலைவர் பாலகிருஷ்ணன், கௌரவ செயலாளர் மரிய ராஜ், முகமது கனி, அந்தோனி சாமி, மாவட்ட பொருளாளர் சுந்தரம், ஒன்றிய பொதுச் செயலாளர் சசிதரன், நிர்வாக குழு அமைப்பாளர் கண்ணப்பன், சேதுபதி, ஒன்றிய துணை தலைவர் பழனி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பார்த்திபன், மாவட்ட பொறியாளர் அணி துணை தலைவர் அழகு ராஜா உயர்மட்ட குழு உறுப்பினர் சதீஷ்குமார், ஹரி முருகன், நாகராஜ், செல்வராஜ், ராமு, ஒன்றிய துணை செயலாளர் சுந்தரம், சைக்கிள் கிளப் பொருளாளர் ஜான் பீட்டர் ஆகியோர் திரளாக கலந்து கொண்டார்கள்.

காளையார்கோவில் அரசு மருத்துவர் ராஜராஜன், ரத்த வங்கி ஆலோசகர் சூசை ராஜா, சிவகங்கை மருத்துவ கல்லூரியின் ஆய்வக தொழில்நுட்ப வள்ளுநர் சிவா, செவிலியர், கேத்தரின், சுகாதார ஆய்வாளர் பூமிநாதன் சிறப்பாக பணி புரிந்தார்கள். ரத்தத்தை நன்கொடையாக வழங்கிய 25 க்கும் மேற்பட்ட கொடையாளிகளுக்கு இதனால் எவ்வித தீங்கும் நேராது என்பதையும் பிறிதோர் உயிரை காப்பாற்றும் நற்பேறு பெற்றவராகிறார்கள் என்பதையும் இத்தகைய மானுட பணி மிகுந்த பாராட்டு கூறியதாகவும் திகழும் என பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

Click to Chat