நாம் அனைவரும் ஆதார் வாங்கும் போது கைரேகை வைத்து ஆதார் வாங்கியுள்ளோம் 10 ஆண்டுக்கு ஒருமுறை கைரேகை புதுப்பிக்க வேண்டும். Masked ஆதார் அட்டையில் கடைசி 4 நம்பர் மட்டுமே தெரியும்.
நமது ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் செய்ய விரும்பினால் 2 முறை மட்டுமே மாற்ற முடியும். பாலினம் அல்லது பிறந்த தேதி மாற்ற நினைத்தால் ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். முகவரி மட்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.
ஆதார் அட்டையில் ஏதேனும் ஒன்றை மாற்ற விரும்பினால் Google லில் uidai.gov.in சென்று Update Aadhar Option தேர்வு செய்ய வேண்டும். பின்பு அதில் உள்நுழைய வேண்டும். பிறகு Online Update Service சென்று மாற்றி கொள்ளலாம். பின்பு Document Update கொடுத்து ஆவணம் Upload செய்து கொள்ளலாம்.
ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற Aadhar Update ல் சென்று Correction form full செய்து E-Sevai மையம் சென்றால் மாற்றி கொள்ளலாம்.