அரசு பள்ளிகளில் வழங்கும் சாப்பாடுகளில் பல வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. அவற்றை நாம் காண்போம்.
மாதத்தில் உள்ள 4 வாரங்களில் முதல் வாரமும் மூன்றாவது வாரமும் திங்கள் கிழமை வெஜிடபிள் பிரியாணி மற்றும் மிளகு முட்டை வழங்கப்படுகிறது.
செவ்வாய் கிழமை தக்காளி மசாலா முட்டை மற்றும் கருப்பு கொண்ட கடலை புலவு வழங்கப்படுகிறது.
புதன்கிழமை தக்காளி சாதம் மற்றும் மிளகு முட்டை யும் வழங்கப்படுகிறது.
வியாழக்கிழமை சாம்பார் சாதம் மற்றும் வேகவைத்த முட்டை வழங்கப்படுகிறது.
வெள்ளி கிழமை சில நாள் கீரை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதம், மசாலா முட்டை மற்றும் வறுத்த உருளைக்கிழங்கு வழங்கப்படுகிறது.
மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது வாரத்தில் வழங்கும் உணவுகள்.
திங்கட்கிழமை சாம்பார் சாதம் மற்றும் வெங்காயம் தக்காளி மசாலா முட்டை வழங்கப்படுகிறது.
செவ்வாய் கிழமை மீன்மேக்கர் வெஜிடபிள் சாதம் மற்றும் மிளகு முட்டை வழங்கப்படுகிறது.
புதன்கிழமை புளி சாதம் மற்றும் தக்காளி மசாலா முட்டை வழங்கப்படுகிறது.
வியாழக்கிழமை எலுமிச்சை சாதம், பச்சை பயறு சுண்டல் மற்றும் தக்காளி மசாலா முட்டை வழங்கப்படுகிறது.
வெள்ளி கிழமை சாம்பார் சாதம் வேகவைத்த முட்டை மற்றும் வறுத்த உருளைக்கிழங்கு வழங்கப்படுகிறது.
சமைப்பதற்கான விதிமுறைகள்:
ஒரு மாணவன் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 100 கிராம் அரிசி 15 கிராம் பருப்பு 3 கிராம் எண்ணெய் அளவு வழங்க வேண்டும்.
6 முதல் 10 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 150 கிராம் அரிசி 15 கிராம் பருப்பு 3 கிராம் எண்ணெய் அளவு வழங்க வேண்டும்.
ஒரு மாதத்தில் எத்தனை மாணவர்கள் சாப்பிட்டார்கள் என்று அரசாங்கத்திற்க்கு கணக்கு கொடுக்க வேண்டும். இதனை சரிபார்க்க அதிகாரிகளும் உள்ளன.