இன்று சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையாக கிறிஸ்தவர்கள் வருடம்தோரும் ஈஸ்டர் பண்டிகைக்கு 40 நாள் முன்பாக தவக்காலமாக இருக்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் இந்த தவக்கால நாட்களில் ஆடம்பர காரியங்களை தவிர்த்து ஜெபம், தவம், தர்மம் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றன. அதுபோல இந்த வருட 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன் திறமையுடன் இன்று தொடங்கியது.
சாம்பல் புதன் நாளன்று அனைத்து கிறிஸ்தவ கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனை, திருப்பலியும் நடைபெற்றது. குருத்தோலைகளை எரித்து தயாரிக்கப்பட்ட சாம்பலை மக்கள் நெற்றியில் பூசி தங்களுடைய தவக்காலத்தை தொடங்கினர்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் விதமாக சிலுவைப்பாதை வழிபாடு நடக்கும்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட ஏப்ரல் 15 நாளன்று புனித வெள்ளி தினமாகவும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஏப்ரல் 17 நாளன்று ஈஸ்டர் பண்டிகை தினமாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.