சுமார் 4000 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்படுத்தி வரும் மூலிகை ஏலக்காய் ஆகும். இந்த ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்களை பார்ப்போம்.
ஏலக்காயில் புரதம், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் உள்ளது.
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த ஏலக்காயை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
ஜீரண கோளாறுகள் நீங்கும்:
பசி இல்லை சாப்பிட பிடிக்கவில்லை என்று சொல்பவர்கள் தினம் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று வர உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.ஜீரன உறுப்புகளின் பலம் அதிகரிக்கும். ஜீரண உறுப்புகளை துரிதப்படுத்தி ஜீரண நீரை சுரக்க செய்யும். இதன் மூலம் நன்கு பசி எடுக்க செய்யும். வயிறு உப்புசம், வயிறு வலி போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வர குணமாகும்.
நெஞ்சு சளி மறையும்:
அதிக மார்பு சளி காரணமாக மூச்சு விடுதல் சிரமம் ஏற்படும். அதிக இருமலால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு ஏலக்காய் மென்று சாப்பிட்டு வர நெஞ்சு சளி குணமாகும். நெஞ்சு சளியை உருவாக்க கூடிய பேக்ட்ரியாக்களை அழிக்க கூடியது ஏலக்காய் ஆகும்.
வாய் துர்நாற்றம் நீங்கும்:
ஜீரண உறுப்புகளில் ஏதேனும் கோளாறுகள் ஏற்படுவது காரணமாகதான் வாய் துர்நாற்றம் ஏற்படும் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு ஏலக்காய் மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
உடல் நச்சுக்களை வெளியேற்றும்:
நமது உடலில் அடிக்கடி நோய் ஏற்பட காரணம் நமது உடலில் தேங்கி இருக்க கூடிய நச்சுக்களிவு தேவை இல்லாத நச்சுக்களை வெளியேற்றக் கூடியது ஏலக்காய் தினம் ஒரு ஏலக்காய் மென்று சாப்பிட்டு வர உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். உடல் புத்துணர்ச்சி தரும்.
வாய் ஆரோக்கியம் மேம்படும்:
வாய் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது ஏலக்காய் வாய்ப்புண், பல் சொத்தை, பல் ஈர்களில் வீக்கம் போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஒரு ஏலக்காயை உமிழ் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வர வாய் ஆரோக்கியம் மேம்படும்.
தலைசுற்றல் நீங்கும்:
அநேக பேருக்கு வாகனத்தில் செல்லும் போது அல்லது வெயிலில் செல்லும் போது தலைசுற்றல், வாந்தி மற்றும் மயக்கம் வரலாம் இது போன்ற பிரச்சனைகள் வருபவர்கள் பயணம் செய்யும் போது வாயில் போட்டு ஏலக்காயை மென்று வர வாந்தி மற்றும் மயக்கம் வருவதை தடுக்க முடியும்.