விலை மலிவாக மிக எளிதாக கிடைக்க கூடிய ஒரு பழம் என்றால் கொய்யப் பழம்தான். இந்த கொய்யப் பழத்தில் பல வகையான நன்மைகள் உள்ளன. நார்சத்து அதிகம் கொண்ட கொய்யப் பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்றவை உள்ளன.
தைராய்டு :
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யப் பழம் சாப்பிட்டு வர தொண்டையில் உள்ள தைராய்டு பிரச்னை குணமாகும்.
ரத்தம் :
மனித ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்க கொய்யப் பழம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தினம் ஒரு கொய்யப் பழம் சாப்பிட்டு வர ரத்தத்தின் நச்சுக்களை நீக்கி ரத்தம் சுத்தமாகும். மற்றும் ரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும்.
புற்று நோய்:
புற்றுநோய் உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர புற்றுநோய்க்கு எதிராக கொய்யப் பழம் செயல்படும். “லைகோபீனோ” என்ற வேதி பொருள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்க நினைப்பவர்கள் தினம் ஒரு கொய்யப் பழம் சாப்பிட்டு வரலாம்.
உடல் எடை:
தங்களது உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை தடுப்பதோடு உடைபயிச்சி செய்வதோடு தினம் ஒரு கொய்யப் பழம் சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.