நாம் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருவதால் மருத்துவ செலவே இருக்காது என அநேகர் சொல்லி நாம் கேள்வி பட்டிருப்போம். ஆப்பிள் பழத்தில் விட்டமின் ப்ரோட்டீன் மற்றும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்க கூடிய நன்மைகளை நாம் கீழே பாப்போம்.
வாய் நுண் கிருமி நீங்க:
தினம் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் வாயில் உள்ள நுண் கிருமிகளை நீங்கமுடியும். ஆப்பிள் பழத்தில் மாலிக் அமிலம் அதிகமாக உள்ளது.
கெட்ட கொழுப்புகள் நீங்க:
நமது உடலில் சேரக்கூடிய கெட்ட கொழுப்புகளுக்கு காரணம் நாம் வெளியில் வாங்கி சாப்பிடக்கூடிய எண்ணெய் நிறைந்த உணவுகளே காரணம். அதனால் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீங்க மிகவும் பயனுள்ளதாக ஆப்பிள் பழம் உள்ளது. தேவையில்லாமல் கொழுப்பு சேருவதையும் தடுக்கிறது.
சர்க்கரை நோய்:
நீர்சத்து அதிகம் காணப்படும் உணவுகளில் ஆப்பிள் பழம் முதல் இடத்தில உள்ளது. மாவு சத்தும் அதிக அளவில் இந்த ஆப்பிள் பழத்தில் அதிக அளவு உள்ளது. சக்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை படி ஓன்று அல்லது இரண்டு கீற்று ஆப்பிள் பழைத்தை சாப்பிட்டு வரலாம்.
நோய் எதிப்பு சக்தி அதிகரிக்க:
நோய் எதிப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் தினம் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டு வர உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக ஆப்பிள் பழம் உள்ளது.