கீரை உணவுகள் அதிகம் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என பலர் கூறுகின்றனர். அதனால் தினமும் ஏதாவது கீரை சேர்த்து கொள்வது நல்லது. பல வகையான கீரைகள் உள்ளன அந்த வகையில் பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

பொன்னாங்கண்ணி கீரையில் உள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, கொழுப்பு சத்து, மினரல் சத்து, இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், சுண்ணாம்பு சத்துக்கள், வைட்டமின் சி, ஏ போன்ற சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

தினமும் பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் உடல் பொலிவு பெற்று முகம் பொலிவாக இருக்கும்.

இரவு நேரத்தில் தூங்காமல் வேலை பார்ப்பவர்களுக்கு கண் சிவப்பாக மாறிவிடும். கண் சிவப்பாக உள்ளது மாறுவதற்கு தினமும் பொன்னாங்கண்ணி கீரை சாப்பிட்டு வந்தால் கண் சிவப்பு மாறிவிடும்.

பொன்னாங்கண்ணி கீரையை சாம்பார் வைத்து சமைத்து சாப்பிட்டு வர உடலில் உள்ள இரத்தம் சுத்தமாக மாறும்.

ஒரு சிலருக்கு கண் பார்வை சரியாக தெரியாது இவ்வாறு உள்ளவர்கள் தினமும் பொன்னாங்கண்ணி கீரையை சமைத்து சாப்பிட்டு வர கண் பார்வை நன்றாக தெரியும்.

தினமும் பொன்னாங்கண்ணி கீரை சாப்பிட்டு வர மலச்சிக்கல் மற்றும் மூலநோய் போன்றவை குணமாகும்.

Leave a Comment

Click to Chat