நமக்கு நன்றாக கிடைக்கக்கூடிய ஆரஞ்சு பழத்தில் பல்வேறு வகையான மருத்துவப் பயன்கள் உள்ளன. அந்த மருத்துவப் பலன்கள் நாம் இப்போது காணலாம்.
- உடலில் உள்ள கொழுப்பு அளவு சீராகும்:
அதிக அளவு கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆரஞ்சு பழத்திலுள்ள நார் சத்துக்கள் நமது உடலிலுள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பை குறைத்து வெளியேற்றும். - இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவும்:
உடலில் பொட்டாசியம் சத்து குறையத் தொடங்கும்போது இதயம் சம்பந்தமான வியாதிகள் வரத்தொடங்கும். ஆரஞ்சில் பொட்டாசியம் சத்து அதிகளவில் காணப்படுகின்றது. இது இருதய சுவர்களுக்கு வலு கொடுப்பதுடன் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவி செய்கிறது. இருதயப் பிரச்சனையா அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் நல்லது. - நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
ஆரஞ்சு பழத்தில் உள்ள விட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். உடலில் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். மற்றும் இதில் இருக்கக்கூடிய பாலிப்னால் எனும் வேதிப்பொருள் உடலில் வைரஸ் தொற்று வராமல் பாதுகாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். - மலச்சிக்கல் குணமாகும்:
தொடர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வர ஆரஞ்சு பழத்திலுள்ள நார்சத்து குடலின் இயக்கத்தை சீராக இயக்கி மலம் எளிதில் வெளியேற உதவியாக இருக்கும். அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவர மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்
- கண் பார்வை தெளிவாக தெரியும்:
கண்ணில் பிரச்சனை உள்ளவர்கள் ஆரஞ்சு பழம் சாப்பிடுவார்கள் ஆரஞ்சு பழத்திலுள்ள கரட்டினாய்டுகள் என்னும் வேதிப்பொருள் விட்டமின் ஏ சத்தாக மாறி கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும் கண் பார்வை மங்கலாக உள்ளவர்கள் ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வரும் கண் பார்வை தெளிவாகத் தெரியும். - உயர் ரத்த அழுத்தம் குறையும்:
உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் உள்ளவர்கள் ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வர இதில் உள்ள பெரிட்டின் மற்றும் ப்ளோவனாய்டுகள் அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மற்றும் இதில் உள்ள மெக்னீசியம் ரத்தம் சீராக இருக்க உதவும். - சிறுநீரக கற்கள் கரையும்:
சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடித்துவர சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். மற்றும் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கவும் உதவும். - மூட்டு வலி குணமாகும்:
மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஆரஞ்சுப் பழம் ஜூஸ் போட்டோ குடித்துவர மூட்டு வலி பிரச்சனை குணமாகும். மூட்டுகளில் உள்ள வீக்கத்தை குறைத்து மூட்டுகளுக்கு நல்ல பலனைத் தரும்.