நாம் எல்லோருக்கும் வயல்வெளிகளிலும், வரப்புகளிலும் எளிதாக கிடைக்கக்கூடிய காய் கோவைக்காய் இந்த கோவைக்காயில் சாப்பிடுவதால் பல வகையான மருத்துவ நன்மைகள் உள்ளன.

கோவக்காயில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் பி1,பி2, நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது. அதிக சத்துக்கள் நிறைந்த கோவைக்காய் லேசான கசப்பு தன்மை கொண்டது.

  1. சக்கரை நோயை குணமாக்கும்:
    சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் கோவைக்காயில் உள்ள கசப்புத்தன்மை மற்றும் நார்ச்சத்து ஆகியவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் கோவைக்காய் மிகவும் நல்லது.
  2. குடல் புழுக்களை நீக்கும்:
    கோவைக்காயில் அதிகப்படியான நேச்சுரல் ஆண்டிபயாடிக் மற்றும் மைக்ரோ ப்ராப்பர்ட்டீஸ் அதிகம் நிறைந்துள்ளது. கோவைக்காய் கசப்புத் தன்மை கொண்டதாம் வயிற்றிலுள்ள கொக்கிப்புழு நாடா புழு மற்றும் அதன் முட்டைகளை அழிக்கும் தன்மை கொண்டது.
kovakkai
  1. உடல் எடையை குறைக்க உதவும்:
    உடல் எடையை குறைக்க தேவையான நார் சத்து அதிக அளவில் காணப்படுவதால் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைக்க உதவும்.
  2. அனீமியா வராமல் தடுக்கும்:
    உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் ரத்தசோகை ஏற்படும். 100 கிராம் கோவைக்காயில் 1.4 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கொடுப்பதோடு ரத்த சோகை வராமல் தடுக்கும்.
  3. இதயம் ஆரோக்கியமாக இருக்கும்:
    இதயம் ஆரோக்கியமாக இருக்கவும் இதய தசைகள் சுருங்கி விரியவும் மிகவும் அவசியமான பொட்டாசியம் சத்து இந்த பொட்டாசியம் கோவைக்காயில் அதிக அளவு உள்ளது. உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவி செய்யும்.
  4. வாய்ப்புண் குணமாகும்:
    மன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நமது உதட்டில் புண் வரும் அந்தப் புண்னை குணமாக்க கோவைக்காய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கோவைக்காய் சாருடன் வெண்ணெய் கலந்து வாய்புண் மேல் தெய்த்து வர வாய்ப்புண் குணமாகும். கோவைக்காயை மென்று உமிழ்நீரோடு முழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்.
  5. தோல்நோய்களை குணமாகும்:
    நமது தோலில் ஏற்படக்கூடிய அலர்ஜி, தேமல், அரிப்பு சொறி சிரங்கு, வெண்குஷ்டம் போன்ற தோலில் ஏற்படக்கூடிய பல வியாதிகளை குணமாக்கும் கோவைக்காய் உதவுகிறது.

Leave a Comment

Click to Chat