இந்த காலக்கட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை கண்
பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கான காரணம் வளர்ந்து
வரக்கூடிய வாழ்க்கைமுறை, அதிக நேரம் கணினி பயன்படுத்தல் மற்றும் மரபனு
போன்ற காரணங்களால் கண் பார்வை பாதிக்கப்படுகின்றனர். நாம் சாப்பிடும்
உணவுகளில் கண்களுக்கு தேவையான சத்துக்கள் இல்லாததும் காரணமாகும்.
கண்களுக்குத் தேவையான சத்து விட்டமின் A ஆகும். 

பார்வைத் திறனை அதிகரிக்கும் உணவுகள்:

  1. காய்கறிகள்:

காய்கறிகளில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகள் சாப்பிடலாம்.  கேரட்,
மஞ்சள் பூசணி, மற்றும் குடைமிளகாய் போன்ற காய்கறிகளில் கண்களின்
ஆரோக்கியத்துக்கு தேவையான சத்து காணப்படுகின்றன.

  1. கீரைகள்:

கீரைகளில் அனைத்து வகையான கீரைகளும் கண்களின் ஆரோக்கியத்திற்கு
உதவும். குறிப்பாக முருங்கைக்கீரை மற்றும் பசலைக் கீரையில் விட்டமின் A
அதிகம் காணப்படுகிறது. 100 கிராம் முருங்கைக்கீரையில் 6.7 மி.கி விட்டமின் ஏ
உள்ளது. 100 கி பசலைக் கீரையில் 5.5 மி.கி விட்டமின் ஏ உள்ளது.

  1. பழங்கள்:

பழங்களில் பப்பாளி பழம், மாம்பழம் மற்றும் முழாம்பழம் போன்ற பழங்களில்
கண்களின் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. இந்த பழங்களில்
விட்டமின் A காணப்படுகின்றன. 

ஆரஞ்சு மற்றும் எழுமிச்சை பழத்தில் கண்ணுக்கு தேவையான சத்துக்கள்
காணப்படுகின்றன. 

  1. அசைவ உணவுகள்:

முட்டையில் விட்டமின் A அதிகம் காணப்படுகின்றன. மீனில் நல்ல கொழுப்பு
அமிலம் அதிக அளவில் உள்ளது. இது கண்களுக்கு மிகவும் அவசியமான சத்து
ஆகும். ஆட்டு ஈரலில் விட்டமின் A காணப்படுகின்றன. 100 கி ஈரலில் 15.6 மி.கி
விட்டமின் ஏ  உள்ளது. இந்த உணவின் மூலம் கண்களின் ஆரோக்கியத்தை
பாதுகாக்கலாம்.

  1. கிழங்கு வகைகள்:

சக்கரை வள்ளி கிழங்கிள் கண்களுக்கு தேவையான சத்துக்கள்
காணப்படுகின்றன. 

  1. நட்ஸ்:

பாதம் மற்றும் வாழ்நாட் போன்றவற்றில் கண்களுக்கு தேவையான சத்துக்கள்
உள்ளன. 

இந்த உணவுகளை சாப்பிடாளே கண் பார்வை திறன் அதிகரிக்கும்.

Leave a Comment

Click to Chat