வீட்டு கடன் (Home Loan):

நாம் புதிதாக ஒரு வீடு கட்டவேண்டும் என்றால் அதற்காக வங்கியில் வீட்டுக்
கடன் வாங்கலாம்.
வீட்டுக்கடனானது புதிதாக வீடு கட்டுவோர் மட்டுமின்றி ஏற்கனவே வீடு
உள்ளவரும் இந்த வீட்டுக் கடனை வாங்கலாம்.
புதிதாக வீடு கட்ட, பழைய வீட்டை சரிபார்க்க போன்ற காரணங்களுக்காக
வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம்.
வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் Finance நிறுவனத்திடமும் நாம் வீட்டுக் கடன்
வாங்கலாம்.
வட்டி வீதமானது 6% முதல் 12% வரை இருக்கும்.
வங்கிக்கு வங்கி இந்த வட்டி வீதம் மாறலாம்.
வட்டி நமக்கு குறைவாக இருக்க வேண்டும் என்றும் சிபில் ஸ்கோர் (Cibil Score)
சரியான முறையல்  இருக்க வேண்டும்.

வட்டி நிலையான வட்டி மற்றும் மாறுபட்ட வட்டி என இரண்டு வகை உண்டு.

நிலையான வட்டியானது கடைசிவரை ஒரே மாதிரியாக இருக்கும் மாறவே
மாறாது.

மாறுபட்ட வட்டியில் RBI ரெப்போ ரேட் (Reppo Rate) என அறிவிக்கும். அப்பொழுது
ரெப்போ ரேட் (Reppo Rate) அதிகரிக்கும் போது வட்டியும் அதிகரிக்கும்.  ரெப்போ ரேட்
(Reppo Rate) குறைந்தால் வட்டியும் குறையும்.
வங்கியில் வீட்டுக் கடன் வாங்க முகவரி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்,
புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, வருமானச் சான்று, மனை பத்திரம்,
தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்றவை வங்கியில் கொடுத்து வீட்டு
கடன் பெற்றுக் கொள்ளலாம்.

வீட்டுக்கடனின் தொகை வீட்டின் தன்மையைப் பொறுத்து மாறும்.
நம்முடைய வயது, நம்முடைய மாத சம்பளம் போன்றவற்றின் அடிப்படையில்
வீட்டுக்கடன் நமக்கு வழங்கப்படும்.
வீட்டுக்கடனை 5 ஆண்டுகளிலிருந்து 25 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 30
ஆண்டுகளிலும் செலுத்தக்கூடிய வசதி உண்டு.
இரண்டு அல்லது மூன்று மாதங்கள் நாம் கடனை கட்டாமல் விட்டால் சிபில்
ஸ்கோர் (Cibil Score) ஆனது குறையும் அப்படி குறையும் போது வட்டி அதிகரிக்கும்.
நாம் வீட்டுக்கடனை பத்தாண்டுகளில் கட்டி முடிப்போம் ஆனால் முன்கூட்டியே
வங்கியில் நாம் தெரிவிக்க வேண்டும் அவ்வாறு தெரிவித்தார் அதற்கு
ஏற்றார்போல் வட்டி மாறுபடும்.

Leave a Comment

Click to Chat