முட்டை என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று ஆகும். இந்த முட்டையை சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றார்கள். அதிகம் முட்டை சாப்பிடுவதும் ஏற்படும் ஆபத்துகள் பற்றி பார்க்கலாம்.
முட்டையில் புரதச்சத்து அதிக அளவு உள்ளது முட்டையில் புரோட்டின்கள், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் அதிக அளவு முட்டையில் காணப்படுகின்றன. இதனால் ஒரு நாளைக்கு ஒரு முட்டை தான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படலாம்.
ஒரு முட்டையில் 186 மிகி கொழும்பு சத்து காணப்படுகிறது. நாம் தினமும் அதிக அளவு முட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால் கொழுப்புகள் கெட்ட கொழுப்புகளாக மாறி இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தும். இதயம் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் அதிக அளவு முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக அளவு முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். உயர் இரத்த சக்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்சனை உண்டாகும்.
குழந்தைகள் வயதானவர்கள் இரவு நேரங்களில் முட்டை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும்.
கொழுப்பு சத்து முட்டையில் உள்ளதால் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டை அதிக அளவு சாப்பிடுவது நிறுத்த வேண்டும்.
ஒரு சிலர் அதிக அளவு முட்டை சாப்பிடுவதால் வாயு பிரச்சனை ஏற்படலாம் இதனால் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு வரலாம்.