நாம் பயன்படுத்தும் ATM கார்டுகள் பல வகை உள்ளது. அந்த ஏடிஎம் கார்டில் உள்ள சிறப்பம்சங்கள் மற்றும் அவை எதற்காக பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
நாம் நமது வங்கியில் ஏடிஎம் கார்டு வாங்கும் போது ஏடிஎம் கார்டில் என்ன எழுதி இருக்கிறது என நாம் பார்க்க வேண்டும். ஏடிஎம் கார்டில் India Use Only என்று எழுதியிருந்தால் நாம் அந்த ஏடிஎம் கார்டை இந்தியாவிற்குள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
International Debit Card or Credit Card என எழுதியிருந்தால் அந்த கார்டை நாம் உலகம் முழுவதும் பயன்படுத்த முடியும்.
உதாரணமாக SBI வங்கியில் Global International Debit Card என எழுதியிருக்கும் இந்த மாதிரி கார்டுகளை உலகம் முழுவதும் பணம் எடுக்க, பணம் அனுப்ப மற்றும் ஏதேனும் பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.
இந்த ஏடிஎம் கார்டில் ஒரு நாளைக்கு 100 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரை எடுத்து கொள்ளலாம். POS மற்றும் Online பரிவர்த்தனையில் ரூ. 75000 வரை பயன்படுத்தி கொள்ளலாம். Platinum and Visa கார்டு இருந்தால் ஒரு நாளைக்கு ரூ. 1,00,000 வரை பயன்படுத்தி கொள்ளலாம்.
நமது நாடுகளில் வங்கியில் பணம் இருக்கா இல்லையா என்று ஏடிஎம் கார்டு வைத்து சரி பார்க்கும் போது பணம் பிடிக்க மாட்டார்கள். ஆனால் வெளிநாட்டில் நாம் பணம் இருக்கா இல்லையா என்று பார்க்கும் போது ஒரு தடவைக்கு 25 + ஜிஎஸ்டி பிடிப்பார்கள். வெளிநாட்டில் நாம் ஆன்லைன் ல் பண பரிவர்த்தனை செய்யும் போது 3% + ஜிஎஸ்டி பிடிப்பார்கள்.
வருட முடிவில் நம்முடைய ஏடிஎம் கார்டுக்கு Annual Maintenance Charges என 125 + ஜிஎஸ்டி பிடிப்பார்கள். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு ஏடிஎம் கார்டிலும் தனித்துவம் வாய்ந்த தன்மை உள்ளது. அவற்றை தெரிந்து நாம் ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோம்.