காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடிப்பது வழக்கமாக வைத்துள்ளோம். டீ மற்றும் காபி விட காலையில் சாப்பிடுவதில் சிறந்த உணவு என்ன என்பதை பார்ப்போம்.
தேன் கலந்த வெதுவெதுப்பான தண்ணீர்:
பொதுவாக தேன் மிகவும் ஆரோக்கியமான உணவு என நாம் எல்லோருக்கும் தெரியும். தேனில் இருக்கக்கூடிய விட்டமின்ஸ், மினரல் போன்ற சத்துக்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும். சிறிது வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிடும் போது செரிமான உறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஊரவைத்த பாதாம்:
பாதாமில் மெக்னீசியம், விட்டமின் ஈ, புரோட்டின் , ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 உள்ளது. 100 கிராம் பாதாமில் 21.15 கிராம் புரோட்டின் உள்ளது. வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். பாதாம் பருப்பை முதல் நாள் இரவில் நீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. ஊரவைத்த பாதாம் சாப்பிடும் போது தோலை நீக்கிய பிறகு சாப்பிட வேண்டும்.
பப்பாளி:
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட பப்பாளி பழம் மிகவும் சிறந்தது. குடல் இயக்கத்தை சீராக்கும், வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும் பழம் பப்பாளி பழம் ஆகும். இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சக்கரை நோய், இரத்த கொதிப்பு, உடல் பருமன் என்ன போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
தண்ணீர் பழம்:
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த மற்றும் ஒரு பழம் தண்ணீர் பழம் ஆகும். இந்த பழத்தில் 90% நீர்ச்சத்து உள்ளது. கோடை காலத்தில் உடலில் ஏற்படக்கூடிய நீர் வரட்சியை தடுக்கும் உடலுக்கு நல்ல ஒரு எனர்ஜியையும் கொடுக்கும். குறைந்த கலோரிகள் கொண்ட பலம் தண்ணீர் பழம் ஆகையால் அனைவரும் இந்த பழத்தை சாப்பிட்டு வரலாம். கோடை காலத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர தண்ணீர் பழம் மிகவும் சிறந்தது.
முளைகட்டிய பச்சைப் பயறு:
பச்சைப் பயிரை சமைத்து சாப்பிடுவதை விட தண்ணீரில் ஊறவைத்து முளைக்க வைத்து சாப்பிடுவதில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதிக அளவில் புரதம், நார்ச்சத்து, விட்டமின் ஈ, சி, கே போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதில் உள்ள புரதம் தசை வளர்ச்சிக்கும் செல்கள் சேதம் அடைவதை தடுக்கும். நல்ல ஒரு ஆரோக்கியமான உடல் அமைப்பை பெற பச்சை பயறு மிகவும் உதவியாக உள்ளது.