சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவு சாப்பிட வேண்டும். எவற்றை தவிர்க்கலாம் என நாம் கீழே பார்ப்போம்.
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்:
சிறுநீரக சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்காதது சிறுநீரகங்கள் நீர் வரட்சி உண்டாகும். தேவையில்லாத கழிவு உப்புகள் சிறுநீரகத்தில் தேங்க செய்யும் இதுவே சிறுநீரக கற்கள் உண்டாக வாய்பாக உள்ளது. சிறுநீரக கற்கள் உள்ளவர்களும் சரி சிறுநீரக கற்கள் இல்லாதவர்களும் சரி ஒரு நாளைக்கு குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீர் முதல் 3.5 லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும்.
ஆக்சலேட் அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்:
சிறுநீரக கற்கள் உண்டாக கூடிய வகைகளில் ஆக்சலேட் சத்து அதிகம் உள்ளதால் 80% பேர் கற்களால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு காரணம் இரத்தத்தில் ஆக்சலேட் சத்து அதிகமாக இருப்பதே காரணம். ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகள். கீரைகள், வெண்டைக்காய், பீட்ரூட், சோயாபீன்ஸ், பச்சை பட்டாணி, கிழங்கு வகைகள், நட்ஸ், டீ, குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம். போன்றவற்றில் அதிக அளவு ஆக்சலேட் சத்து உள்ளது.
குறைந்த அளவு ஆக்சலேட் சத்து உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்:
பழங்களில் வாழைப்பழம், முலாம்பழம், பப்பாளி பழம், திராட்சை, ஸ்ட்ராபெரி, அன்னாச்சி பழம் போன்ற பழங்களில் ஆக்சலேட் குறைவாக உள்ளது. இந்த பழங்களை சாப்பிடலாம். காய்கறியில் முட்டை கோஸ், காலிஃப்ளவர், குடைமிளகாய், பாகற்காய், வெள்ளரிக்காய், தேங்காய் போன்ற காய்கறியில் ஆக்சலேட் குறைவாக உள்ளது இவற்றை சாப்பிடலாம்.
கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டும்:
பால் மற்றும் பால் சார்ந்த அனைத்து பொருட்கள், பன்னீர், சோயா பீன்ஸ், கீரைகள், பாதம் மற்றும் நட்ஸ் ல் அதிகப்படியான கால்சியம் சத்து உள்ளது. சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளை தினமும் உடலுக்கு தேவையான அளவு எடுத்து கொள்வது நல்லது.
அசைவ உணவில் வரக்கூடிய புரதச்சத்து தவிர்க்க வேண்டும்:
சிறுநீரக கல் உள்ளவர்கள் அசைவ உணவு தவிர்ப்பது நல்லது. சைவ உணவில் இருந்து வரக்கூடிய புரதத்தை எடுத்து கொள்வது நல்லது.
சாப்பிடும் உணவில் உப்பகளை குறைவாக சேர்க்க வேண்டும். சிறுநீரக கல் உள்ளவர்கள் தினமும் 2.2 கிராம் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.