சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்த அரசு பள்ளி ஆசிரியர்கள் வேறு எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது என அறிவித்துள்ளது.
தஞ்சையை சேர்ந்த ராதா என்பவர் நானும் என் கணவனும் அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறோம். அரசு 2021 ஆணையின்படி வீட்டில் கணவன் மனைவி இருவர் 30 கிலோமீட்டர் தொலைவில் அரசு வேலை பார்த்தால் தனது ஊருக்கு அருகில் பணி மாறுதல் செய்து கொள்ளலாம் என அரசாணை வெளியிட்டது. தனக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியன் அரசு விதிகளின்படி பணி மாறுதல் வழங்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்:
தொடர்ந்து பேசிய நீதிபதி இதுபோன்ற நடவடிக்கைகளால் அரசு அரசு பள்ளிகளுக்கு அதிக நிதி அரசு கல்வித்தரம் உயரவில்லை என கூறினார். தனியார் பள்ளிகள் கூட குறைந்த செலவில் தரமான கல்வியை வழங்குகிறது. ஆசிரியர்களுக்கு போதுமான ஊதியத்தை வழங்கியும் ஆசிரியர்கள் பகுதி நேரமாக டியூசன் எடுப்பது போன்ற வேலைகளை பார்க்கின்றனர்.
அரசு ஊதியம் பெறும் அரசு ஆசிரியர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேறு எந்தத் தொழிலிலும் ஈடுபடக்கூடாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. வேறு தொழிலில் ஈடுபடுகிறார்களா என்பதை குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று அறிவித்துள்ளது வேறு தொழிலில் ஈடுபட்டால் அதற்கான தகுந்த தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அரசு ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் பற்றி மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. அவ்வாறு தகுதியற்ற ஆசிரியர்கள் இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. பள்ளிக்கு உள்ளேயும், பள்ளிக்கு வெளியேயும் ஆசிரியர்களின் செயல்பாடு கண்காணிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.