கொய்யாப்பழம் வருடத்திற்கு 100 முதல் 150 கிலோ வரை காய்க்கும் தன்மை கொண்டது. உடலுக்கு தேவையான சத்துக்களை தருகிறது கொய்யாப்பழம் ஆகும். கொய்யாப்பழத்தில் இரண்டு வகை உள்ளது இதில் எது சிறந்த கொய்யாப்பழம் என நாம் கீழே பார்க்கலாம்.
வெள்ளை கொய்யாப்பழத்தின் நன்மைகள்:
மனித உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை அதிகப்படுத்த இந்த கொய்யாப்பழம் உதவுகிறது. எலும்புகளுக்கு கொய்யாப்பழம் பலத்தை கொடுக்கிறது மற்றும் செரிமான குடல் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
சிவப்பு கொய்யாப்பழத்தின் நன்மைகள்:
சிவப்பு கொய்யாவில் வெள்ளை கொய்யாவை விட சத்துக்கள் அதிகம் உள்ளது. சக்கரை மற்றும் மாவுச்சத்து இதில் அதிகமாக உள்ளது.
சிவப்பு கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவு உள்ளது. ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 காணப்படுகின்றன. ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இரவில் சாப்பிடக்கூடாத பழங்கள்:
கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிடுவதற்கு முன்னும் சாப்பிட்ட பிறகும் இந்த பழத்தை சாப்பிட கூடாது. சாப்பிட்ட 1 மணி நேரத்திற்கு பிறகு சாப்பிடலாம்.