ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் போன்றவற்றில் பெரும்பாலான வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுவது கருஞ்சீரகம் ஆகும். நமது உடலுக்குத் தேவையான பலவித சத்துக்கள் கருஞ்சீரகத்தில் உள்ளது. புரதம், கால்சியம், இரும்புச் சத்து போன்ற சத்துக்கள் உள்ளது.
கருஞ்சீரகத்தால் ஏற்படக் கூடிய மருத்துவ பயன்கள் என்னவென்று பார்க்கலாம்.
சாதாரண சளி முதல் கேன்சர் வரை குணப்படுத்தக்கூடியது கருஞ்சீரகம் ஆகும்.
வயிறு சம்பந்தமான அனைத்திற்கும் கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. கருஞ்சீரகத்தைப் பொடிசெய்து வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் கருஞ்சீரகம் பொடி கலந்து காலையில் குடித்து வர வயிறு சம்பந்தமான வியாதிகள் குணமாகும். இரைப்பையில் உள்ள பாக்டீரியா தொற்று நோய்களை குணமாக்கக் கூடியது ஆகும்.
சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை குணமாக்கக் கூடியது கருஞ்சீரகம் ஆகும். கருஞ்சீரகப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து காலை மாலை குடித்து வர சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் குணமாகும்.
தொடர் இருமல், சளி மற்றும் ஆஸ்துமா போன்றவற்றை குணமாக்க கருஞ்சீரகம் பயன்படுகிறது. கருஞ்சீரகப் பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் அரை ஸ்பூன் பூண்டு விழுது சேர்த்து சாப்பிட்டு வர சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.
கருஞ்சீரகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. கருஞ்சீரகத்தின் நல்ல கொழுப்பு அளவு அதிகமாக உள்ளதால் கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது.
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் கருஞ்சீரகம் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
கருஞ்சீரகம் அல்லது புற்றுநோய் கட்டிகள் மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்க கருஞ்சீரகம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒரு டம்ளர் தண்ணீரில் அரை டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை கலந்து காலை மற்றும் மாலை குடித்துவர புற்றுநோய் செல்களை அழிக்கும்.
கருஞ்சீரக எண்ணையை உணவில் சேர்த்து வரும்போது ரத்த கட்டிகள் மற்றும் கொழுப்பு கட்டிகள் குணமாகும்.