கொரோனாவிற்கு பிறகு தொண்டை வலி என்பது அச்சமூட்ட வகையில் ஒன்றாக உள்ளது. இதில் இனிப்பான மருந்து தேன் உட்கொண்டால் குணமாகும் என்பது குறித்து பார்க்கலாம்.
மருந்து என்றால் கசப்புடன் இருக்க வேண்டும் என்ற விதியை மாற்றியது இந்த தேன் ஆகும். சக்கரை, விட்டமின் சி, கார்ப்போ ஹைட்ரைட், இரும்பு, துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் என பல சத்துக்களை தன்னகத்தில் கொண்டுள்ளது தேன். நோய் எதிர்ப்பு ஆற்றலையும் எதிர்த்து வழங்குவது தேன் ஆகும்.
வெதுவெதுப்பான நீர் அல்லது எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் தொண்டை வலியில் இருந்து விரைவில் விடைபெறலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் தேனில் உள்ள பாக்டீரியாக்கள் ஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தொண்டை வலி காய்ச்சல் போன்ற கால கட்டத்தில் தேனை உட்கொள்வது கூடுதல் பலனை தரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மற்ற இனிப்புகளை போல தேனும் சக்கரை நோயாளிகளுக்கு தேனும் எதிரிதான்.
சக்கரை நோயாளிகள் தேனை உட்கொண்டால் சக்கரை அளவு அதிகரிக்கும். தொண்டை வலியை குணமாக்க தூய தேன் உட்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தேன் தயாரிக்கும் முறையை அறிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றன.
தொண்டை வலியை குணமாக்குவது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் தன்மையும் தேனுக்கு உள்ளது. தினமும் தேன் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும்.