நாம் அனைவருக்கும் அனேக கனவுகள், திறமைகள் போன்றவைகள் இருக்கும் ஆனால் நாம் அவற்றை சரியாக பயன்படுத்துவது கிடையாது. ஒரு சிலர் மட்டுமே தான் நினைத்ததை செய்து முடிக்கின்றனர். நாம் ஏன் மற்றவர்கள் போல் நினைத்ததை செய்ய முடியவில்லை. மற்றவர்கள் நாம் நினைப்பதை எவ்வாறு எளிய முறையில் செய்து முடிக்கலாம் என பார்ப்போம்.

  1. முக்கியமான பணியில் கவனம் செலுத்த வேண்டும்:
    உதாரணமாக ஒரு டிராபிக் போலீஸ் நான்குவழிச் சாலை நடுவில் நிற்கிறார் நான்கு பக்கமும் நெரிசல் இருக்கும்போது முதலில் எந்தப் பக்கத்தில் நெரிசல் அதிகமாக உள்ளதோ அந்தப் பக்கத்தில் தான் முதலில் கவனம் செலுத்தி அந்தப் பக்கத்தில் உள்ள கூட்ட நெரிசலை சரி செய்வார். அது போல தான் நாம் காலையில் எழுந்தவுடன் நமக்கு பல வேலைகள் இருக்கும் அந்த வேலைகளில் எது மிகவும் முக்கியமான வேலை எதுவோ நமக்கு மிகவும் அவசியமான வேலை எதுவோ அந்த வேலையை தான் நாம் முதலில் செய்து முடிக்க வேண்டும். சுலபமான வேலை எதுவோ அதை நாம் முதலில் செய்யக் கூடாது. பலபேர் தவரான முறையில் இவ்வாறு தான் செய்கிறோம்.
  2. நமக்கான இலக்கு எப்போதும் குறித்து வைத்திருக்க வேண்டும்:
    நாம் அனைவருக்கும் இலக்கு ஒன்று இருக்கும் அந்த இலக்கை முதலில் நாம் எழுதி வைக்க வேண்டும். அந்த இலக்கை எப்பொழுது செய்து முடிப்போம் என்று தேதியுடன் எழுதி வைக்க வேண்டும். தினமும் நாம் இலக்கை அடைய என்ன செய்தோம் என்பதை குறித்து வைக்க வேண்டும். பின்பு ஒரு நாள் நாம் நம்முடைய இலக்கை அடைய எவ்வளவு வேலை செய்துள்ளோம் என்றுபார்க்க வேண்டும் அவ்வாறு பார்க்கும் போதும் நமக்கே நம் மீது ஒரு நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கை வைத்து நாம் விரைவாக நமது இலக்கை அடைந்துவிடலாம்.
  3. நாம் அடைய வேண்டிய இலக்கு நமக்கு பிடித்தவர்கள் இடம் சொல்ல வேண்டும்:
    அடைய வேண்டிய இலக்கை நமக்கு பிடித்தவர்களிடம் சொல்லும்போது நாம் அவர்களிடம்  சொல்லி விட்டோமே என்ற நோக்கத்திற்காக எப்படியாவது நாம் அந்த இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வந்து விடும். இந்த ஒரு காரணத்திற்காகவே நாம் சொன்ன அந்த இலக்கை அடைந்து விடுவோம்.

நாம் ஒரு சில இலக்குகளை அடையு நமக்கு கால தாமதம் ஆகலாம். அவ்வாறு கால தாமதம் ஆகும் வரை நாம் பொருமையாக இருக்க வேண்டும்.

Leave a Comment

Click to Chat