லைசன்ஸ் எடுப்பதற்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும். முதலில் LLR பதிவு செய்த 30 தினங்களுக்கு பிறகு லைசன்ஸ் பெற்றுக்கொள்ளலாம்.
லைசன்ஸ்சில் லைட், பேஜ், கெவி 3 வகை உள்ளது.

லைட் லைசன்ஸ் ஆனது சொந்த வாகனங்கள் மட்டுமே ஓட்ட பயன்படுத்திக்கொள்ளலாம். நமது லைசென்ஸ் முன்பக்கத்தில் NT (Non Transport) என குறிப்பிடிருக்கும். அதேபோல் நமது லைசன்ஸ் பின்னால் நாம் எந்த எந்த வண்டியை ஓட்டலாம் என புகைப்படத்துடன் குறிப்பிட்டிருக்கும்.

கியர் உள்ள வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் நமது லைசன்ஸ் பின்னால் MGWG எனக் குறிப்பிட்டிருக்கும் கியர் இல்லாத வாகனம் என்றால் MGWOC எனக் குறிப்பிட்டிருக்கும்.

லைட் லைசென்ஸ் வைத்திருந்தால் 20 வருடம் செல்லுபடி ஆகும். 30 முதல் 50  வயதுக்குள் லைசென்ஸ் எடுத்தான் 10 வருடம் செல்லுபடி ஆகும். 51 முதல் 55 வயதுக்குள் லைசன்ஸ் பெற்ற 60 வயது வரை  செல்லுபடி ஆகும் 55 வயதுக்குமேல் லைசன்ஸ் பெற்றால் 5 வருடம் மட்டுமே செல்லுபடி நாட்களாகும்.

பேஜ் லைசன்ஸ் எடுப்பதற்கு முன்பு லைட் லைசென்ஸ் எடுத்திருக்க வேண்டும் இந்த பேட்ஜ் லைசென்ஸ் எடுக்க 21 வயது முடிந்திருக்க வேண்டும். பேட்ஜ் லைசென்ஸ் உள்ளவர்கள் கமர்ஷியல் வாகனங்கள் ஓட்டலாம் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே ஓட்ட முடியும்.
பேட்ஜ் லைசென்ஸ்க்கு 5 வருடம் மட்டுமே செல்லுபடியாகும்.

ஹெவி லைசன்ஸ் எடுக்க ஹெவி LLR எடுக்க வேண்டும் ஆறு மாத காலம் வரை வாகனம் ஓட்டிக் காட்ட அனுமதி வழங்குவார்கள் ஹெவி லைசென்ஸ் இருந்தால் அனைத்து வாகனங்களையும் ஓட்டலாம். ஹெவி லைசன்ஸ் இல் வாகனம் ஓட்டும் போது அரக்கு கலர் உடை அணிந்திருக்க வேண்டும். ஹெவி லைசன்ஸ்கும் 5 வருடம் மட்டுமே செல்லுபடி ஆகும்.

Leave a Comment

Click to Chat