IMEI நம்பர் என்றால் மொபைல் போன் பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் அந்த மொபைல் போனில் ஒரு நம்பர் இருக்கும் அதுவே IMEI நம்பர் எனப்படும். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு கைபேசிக்கும் ஒவ்வொரு நம்பர் இருக்கும்.

imei number

நமது மொபைல் போன் தொலைந்து விட்டால் IMEI நம்பர் வைத்து கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். நம்முடைய மொபைல் போன் தொலைந்து விட்டால் அதனை யாரும் பார்க்கக் கூடாது எந்த விஷயமும் தெரிந்து கொள்ளக் கூடாது என்றால் காவல் நிலையத்தில் சென்று செல்போனை பிளாக் செய்து விடலாம் அதற்கு இந்த நம்பர் மிகவும் அவசியம்.

செல்போன் நமது கையில் இருக்கும் போது இந்த நம்பர் தேவைப்படாது நமது செல்போன் தொலைந்து விட்டால் கண்டுபிடிக்க பயனுள்ளதாக இருக்கும் ஒவ்வொரு செல்போனுக்கும் ஒவ்வொரு நம்பர் இருக்கும் இந்த நம்பரை நாம் தான் கவனமாக எழுதி வைத்திருக்க வேண்டும்.

நாம் பயன்படுத்தும் மொபைல் போன் ஆண்ட்ராய்டு மொபைல் போனாக இருந்தால் அதற்கு ஐஎம்இஐ நம்பர் இருக்கும். சாதாரண பட்டன் மொபைல் ஆகவும் இருந்தால் அதற்கும் ஐஎம்இஐ நம்பர் இருக்கும்.

IMEI நம்பர் மொபைல் போனில் *#06# என்ற எண்ணுக்கு Dial செய்தால் IMEI நம்பர் Display ஆகும்.

பழைய மாடல் போனில் சிம் போடும் இடத்தில் நம்பர் இருக்கும் தற்பொழுது உள்ள மொபைல் போனில் பின்புறத்தில் பிரிண்ட் செய்திருப்பார்கள்

Leave a Comment

Click to Chat