TRP Rating காக பல டிவி சேனல்கள் போட்டி போடுகின்றன. அந்த TRP எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்பதை பார்ப்போம்.

பல சேனல்கள் உள்ளன அந்த சேனல்களில் மக்கள் எந்த சேனலை அதிகம் விரும்பிப் பார்க்கிறார்களோ அந்த சேனலுக்கு TRP – Target Rating Pont (இலக்கு அளவீட்டு புள்ளி) என அழைக்கப்படுகின்றன.

ஆரம்ப காலத்தில் TRP ரேட்டிங் கணக்கிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட ஏரியாவை தேர்வு செய்து அங்குள்ள ஒரு வீட்டில் People’s Meeter (பீப்பிள்ஸ் மீட்டர்) எனும் Equipment (எக்யூப்மென்ட்) வைத்துவிடுவார்கள் அந்த Equipment ஆனது எந்த சேனலை அதிகம் விரும்பி பார்க்கிறார்களோ அந்தந்த சேனலுக்கு தகுந்தார்போல் TRP ரேட்டிங் பாயின்ட் தேர்வு செய்து விட்டு (ITAM) Indian Television Audience Measurement சொல்லிவிடுவார்கள் டேட்டாவை பத்திரமாக வைத்துக் கொள்வார்கள்.

People’s Meeter இருந்த வீட்டை டிவி சேனலில் உள்ளவர்கள் எங்களது சேனலை அதிகநேரம் பாருங்கள் என்று மக்களிடமே நேரடியாக சென்று சொல்வார்கள் இதனால் இந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது.

(BARC) Broadcast Audience Research Council நிறுவனமானது 55000 வீட்டிற்கு ஒன்று பாரோமீட்டர் என்கின்ற ஒரு Equipment ஐ வைத்தது. இது ஆடியோ டேட்டா அனைத்தயும் எடுத்து கொடுக்கும் இதை அவர்கள் பத்திரமாக வைத்து கொள்வார்கள்.

பாரோமீட்டர் வைக்கும்போது விசாரித்துவிட்டு சாதாரண மக்களின் வீட்டில் வைத்து விடுவார்கள் இது எந்த ஒரு டிவி சேனலுக்கும் தெரியாது. இதனால் எந்த ஒரு டிவி சேனல் காரர்களும் எங்கள் சேனலை பாருங்கள் என்று மக்களிடம் சொல்ல முடியாது.

TRP அதிகம் உள்ள டிவி சேனலில் எந்த சேனலுக்கு அதிகம் TRP அதிகம் உள்ளதோ அதற்கு அந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம் அதிகம் வழங்கப்படும்.  அதிக விளம்பரம் வந்தால் அதிக வருமானம் வரும். ஒவ்வொரு சேனலுக்கும் ஒவ்வொரு Program க்கும் தனி தனி கோடு நம்பர் உள்ளது. இவை அனைத்தயும் பாரோமீட்டர் டேட்டாவாக எடுத்து BARC க்கு கொடுத்து விடும்.

வாரம் வாரம் வியாழக்கிழமை எந்த சேனல் எவ்வளவு TRP ரேட்டிங் எவ்வளவு என்பதை வெளியிடும். நாம் அதனை அதன் அதிகாரபூர்வ வலைதளத்தில் சென்று பார்க்கலாம்.

5.00 Pm to 5.30 Pm வரை உள்ள நேரத்தை Early Prime Time என்று குறிப்பிடுகின்றன.

6:00 Pm, 6:30 Pm, 11:00 Pm Non Prime Time Slot என அழைக்கப்படுகின்றன.

7:00 – 7:30 Pm Semi Prime Time Slot என அழைக்கப்படுகின்றன.

8:00 – 8:00 Pm Prime Time Slot என அழைக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் போடப்படும் நிகழ்ச்சிகள் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கக்கூடிய நிகழ்ச்சியாக இருக்கும்.  இந்த நேரத்தில் தான் விளம்பரம் அதிகம் போடப்படும்.

Super Prime Time Slot 9:00 Pm – 9: 30 Pm

இவ்வாறுதான் டிவி சேனல்கள் அனைத்தும் தங்களது TRP ரேட்டிங் ஐ கணக்கிடப்படுகின்றன.

Leave a Comment

Click to Chat