நாம் தெரிந்தோ தெரியாமலோ நமது System, Pendrive ல் உள்ள போட்டோக்களை Delete செய்திருக்கலாம். வைரஸ் காரணமாக நமது டேட்டா காணாமல் போயிருக்கலாம். அவ்வாறு கானாமல் போன டேட்டாக்களை எவ்வாறு எளிய முறையில் திரும்ப எடுக்கலாம் என பார்ப்போம்.
Tenorshare 4DDiG என்ற (Software) மென்பொருளை முதலில் நாம் நமது கணினியில் (Download) பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த Software Mac மற்றும் (Windows) விண்டோஸ் ஆகிய இரண்டிலும் பயன்படுத்தலாம்.
Software ஐ தரவிறக்கம் செய்தவுடன் Install செய்து கொள்ளவும். பின்பு அவற்றை Open செய்து கொள்ளவும் நாம் எந்த ட்ரைவிலிருந்து நமது டேட்டாவை திரும்பப் பெற விரும்புகிறோமோ அந்த டிரைவ் ஐ தேர்வு செய்து கொள்ளவும். அல்லது பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றிலிருந்து நாம் டேட்டாவை திரும்ப பெற விரும்பினால் அவற்றை நாம் கணினியில் கனெக்ட் செய்து திரும்ப பெறலாம்.
நாம் நமது டேட்டாக்களை திரும்பப்பெறும் போது முதலில் ஸ்கேன் ஆகும். பின்னர் வீடியோ, போட்டோஸ், ஆடியோ போன்றவை தனியே காட்டும் அவற்றில் நமக்கு எது தேவையோ அதை மட்டும் தேர்வு செய்து நாம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு நாம் எளிய முறையில் நமது டேட்டாக்களை திரும்ப எடுத்துக்கொள்ளலாம்.