கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம் என ரிசர்வ் பேங்க்
ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய்
நோட்டுகளை பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரில் உள்ள ரிசர்வ் வங்கியில்
மட்டுமே மாற்றும் முறை இருந்தது.

இதனால் கிராமப்புற மக்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மிகவும்
சிரமப்பட்டனர். மாதந்தோறும் பல கோடி ரூபாய் நோட்டுகள் வீணாவது ஆய்வு
அறிக்கையில் தெரியவந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் கிழிந்த மற்றும் மாற்றவே முடியாது ரூபாய் நோட்டுகளை
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அதன் கிளை வங்கிகள், தனியார் வங்கிகள்
மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என ரிசர்வ்
வங்கி அறிவித்தது.

கொரோனா ஊரடங்கு காரணத்தால் வங்கிகள் ரிசர்வ் வங்கி அறிவிப்பை பின்பற்ற
முடியாமல் போனது.

இனிமேல் பொதுமக்கள் கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை
எந்த வங்கியிலும் மாற்றலாம் என அறிக்கை வெளியிட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்க உடனே
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போதுமான சில்லறை நாணயங்கள்
வழங்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள்
மகிழ்ச்சி அடைந்துள்ளன.

Leave a Comment

Click to Chat