Google Pay, Phonpe ல ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ₹1,00,000 வரை பணம்
அனுப்பலாம்.
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 முறை பணம் அனுப்பலாம்.
₹ 1,00,000 வரை பணம் அனுப்புவது வங்கிக்கு வங்கி மாறலாம்.
Google Pay ல்  பணம் (Money) Request கொடுப்பது ரூ. 2000 வரை மட்டுமே கொடுக்க
முடியும்.
Google Pay, Phonpe வங்கிக்கு பணம் அனுப்பும் போது எந்த ஒரு கமிசன் (Commission)
பணமும் பிடிப்பதில்லை.
Google Pay ல் மொபைல் ரீசார்ஜ் மற்றும் பில் பேமென்ட் எது செலுத்தினாலும்
கூடுதல் கட்டணம் எதுவும் பிடிக்கப்பட மாட்டாது.
Phonepe ல் ரீசார்ஜ் செய்தால் ₹1 இருந்து ₹2 வரை கூடுதல் கட்டணம் (Commission)
பிடிக்க படலாம்.
Google Pay, Phonepe பயன்படுத்தும் பயனாளர்கள் எந்த வங்கிக் கணக்கை
பயன்படுத்துகிறார்களோ அந்த வங்கியில் ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கு
அந்த வங்கிகளிடமிருந்து கமிஷன் தொகையை பெற்றுக்கொள்ளும்.
நாம் பணம் பரிவர்த்தனை செய்யும் போது நம்மிடம் இருந்து பணத்தை
பிடித்துவிட்டு பணம் செல்லாமல் Faild  என இருந்தால் 2 அல்லது 3 நாளைக்குள்
பணம் திரும்ப அனுப்பப்படும். அவ்வாறு அனுப்பவில்லை என்றால் உதவி (Help)
என்ற பட்டனை அழுத்தி உதவி கேட்கலாம். அப்படி இல்லை என்றால் கஸ்டமர்
கேர் அழைத்து உதவி கேட்கலாம்.
இவ்வளவு செய்தும் பணம் வரவில்லை என்றால் நம் வங்கியில் அலைபேசி
மூலம் உதவி கேட்கலாம். அவ்வாறு பணம் வரவில்லை என்றால் நேரடியாக
வங்கியில் சென்று கடிதம் ஒன்றை எழுதிக் கொடுக்கலாம்.

நாம் பரிவர்த்தனை செய்யும் போது ரூபாய் கேன்சல் ஆன நாளிலிருந்து எத்தனை
நாள் தாமதமாக நமக்கு பணம் தருகிறார்களோ அத்தனை நாளிலிருந்து ஒரு
நாளைக்கு ₹ 100 வீதம் நமக்கு இழப்பீடு தர வேண்டும்.

Leave a Comment

Click to Chat