ஆசிய கோப்பை இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாசை வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பாக்கிஸ்தான் அணி 147 ரண்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் அஷ்திப் சிங் 2 விக்கெட்டுகளை யும் ஆவேஷ் கான் 1 விக்கெட்டுகளை யும் கைப்பற்றினார்.
பின்பு களமிறங்கிய இந்தியா அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரண்கள் குவித்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் மற்றும் ஜடேஜா 35 ரண்களும் ஹர்திக் 33 ரண்களும் குவித்தனர்.
இதன் மூலம் இந்திய அணி முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.