ATM ல் ஒரு மாதத்திற்கு 5 முறை வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு மேல்
பணம் எடுத்தால் சேவை கட்டணம் பிடிக்கப்படும். அந்த 5 முறை நாம் எந்த ATM ல்
வேண்டுமென்றாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
Financial Transaction என்பது நாம் ATM ல் பணம் போடுவது மற்றும் எடுப்பது
போன்றவை ஆகும். Financial Transaction 5 முறைக்கு மேல் சென்றால் சேவை
கட்டணம் வசூலிப்பார்கள்.
Non – Financial Transaction என்பது பணம் சரிபார்த்தல், ரகசிய பின் மாற்றுதல், Min
Statement போன்ற காரியங்கள் இவற்றை நாம் செய்வது கணக்கில் சேராது.
இவற்றை செய்வதன் மூலம் இதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
வங்கி நமக்கு குறுஞ்செய்தி அனுப்புவதற்கு மூன்று மாதத்திற்கு ₹ 15 முதல் ₹ 20
வரை கட்டணம் வசூலிக்கும்.
செல்லுபடியாகும் பரிவர்த்தனை க்கு மட்டும் தான் கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படும். செல்லுபடியாகயத பரிவர்த்தனை கணக்கில் எடுத்து
கொள்ள மாட்டார்கள்.
நாம் எத்தனை முறை பணம் எடுத்து உள்ளோம் என்பதை வங்கி அறிக்கை மூலம்
பார்த்துக் கொள்ளலாம்.
Vendor என்கிற தனியார் நிறுவனம் தான் ATM ல் பணத்தை நிரப்புகின்றது. ஒருசில
வங்கியில் அவர்களே பணத்தை நிரப்புகின்றன.
வங்கிக்கு அருகிலுள்ள ATM ல் பணம் தீர்ந்து விட்டால் உடனே நிரப்பி
விடுவார்கள். வங்கிக்கு அருகில் இல்லாமல் மற்ற இடங்களில் உள்ள ATM ல்
பணம் தீர்ந்தால் பணம் நிரப்ப அல்லது 2 நாட்கள் வரை ஆகும்.