கொரோனா குறைந்து அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு சென்று நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டு தேர்வுக்கு தயாராகி விட்டனர்.

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை படித்து வந்தனர் தற்போது பள்ளிகள் திறக்கும் மாணவர்களும் நேரடி வகுப்புகளில் கலந்து படிக்கின்றனர்.

தமிழகத்தில் சொத்து வரி கட்டாத 200 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளது தமிழக அரசு. பள்ளிகளுக்கு தமிழக அரசு சொத்துவரி, பள்ளி வாகனங்களுக்கான வரி, இருக்கை வரி உள்ளிட்ட வரிகளை விதித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்காமல் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்கள் படித்து வந்தனர். இதனால் சொத்துவரி, வாகனங்களுக்கான இருக்கை வரி நீக்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இந்த சூழல் காரணமாக ஏராளமான தனியார் பள்ளிகள் வரி செலுத்தாமல் இந்த நிலையில் தமிழகத்தில் 200 பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள பள்ளிகள் 6 முதல் 10 லட்சம் வரை நிலுவை வரி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரியை செலுத்தா விட்டால் பள்ளியில் இருக்கும் பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என உள்ளாட்சி அமைப்புகள் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தனியார் பள்ளிகள் கொரோனா காலகட்டத்தில் முற்றிலும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களிடம் முழுமையான கல்வி கட்டணம் வசூலிக்க படவில்லை என தெரிவித்துள்ளது.

தாங்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ள இந்த நிலையில் ஜப்தி நோட்டீஸ் அனுப்பியது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளது. ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டது கண்டித்து வரும் 26ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Comment

Click to Chat