காளையார் கோவில் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது இரட்டை
கோபுரம் கொண்ட சொர்ணகாளீஸ்வரர் கோவில் தான்.
ஆரம்ப காலத்தில் காளையார் கோவில் கானப்பயிர் என அழைக்கப்பட்டது.
9 ம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் அருள்பாளித்துள்ள
சொர்ணகாளீஸ்வரர் ஐ காளை என வர்ணித்ததாள் காளையார் கோவில் என
உருவாக்கப்பட்டது.
முதல் கோபுரம் பாண்டிய மன்னர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்
கட்டப்பட்டது. 5 நிலைகளைக் கொண்ட 90 அடி உயரம் உள்ள கோபுரம் ஆகும்.
மருது பாண்டியர் சகோதரர்களால் 18-ம் நூற்றாண்டில் 9 நிலைகளும் 155.5 அடி
உயரமும் கொண்ட கோபுரமாகும்.
ஆங்கிலேயர்கள் 1772 ஆண்டு ஜூன் மாதம் 25 ம் தேதி ஆங்கிலேயர்கள்
காளையார்கோவில் கோவில்களில் உள்ள ஆபரணங்களை கொள்ளையடிக்க
வந்தனர் இதை அறிந்த சிவகங்கையை ஆண்ட மன்னர் முத்துவடுகநாதர் மற்றும்
படைத்தளபதிகளான மருதுபாண்டிய சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போர்
தொடுத்தனர் இந்தப் போரில் முத்துவடுகநாதர் வீரமரணம் அடைந்தார்.
முத்து வடுகநாதரின் உடல் கோவிலின் தென்பகுதியில் அடக்கம்
செய்யப்பட்டுள்ளது.
காளையார் கோவிலில் தென்பகுதியில் உள்ள தெப்பக்குளம் ஆனை மடு என
அழைக்கப்படுகின்றது.
இந்தக் கோவில்களில் 3 மூலவர்கள் மற்றும் 3 அம்பாளும் அருள்பாலித்துள்ளனர்.
முதலாவதாக சொர்ணகாளீஸ்வரர் சொர்ணவல்லி. இரண்டாவதாக
சோமேஸ்வரர் சௌந்தரநயகி.
மூன்றாவதாக சுந்தரேஸ்வரர் மீனாட்சி.
காளையார்கோவிலில் கோவிலின் சிறப்பம்சம் பற்றி தேவாரத்தில் சம்பந்தர்,
சுந்தரர் ஆகியோர் பாடியுள்ளனர்.
மூன்று சன்னதிகள் இந்த கோவிலில் உள்ளது படைத்தல், பாதுகாத்தல் மற்றும்
நிறைவு செய்தல்.
பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் ஆண் மற்றும் பெண் தெய்வங்களுக்கு மூன்று
தனித்தனி சன்னதிகள் சன்னதிக்கு வெளியே உள்ள மண்டபத்தில் உள்ளன.
காளையார் கோவிலில் 540 தமிழர்கள் ஆங்கிலேயர்களால் வெட்டி
கொள்ளப்பட்டனர். ஆனால் இது எந்த ஒரு வரலாற்று நிகழ்வுகளிலும் இடம்
பெறவில்லை.
1801 ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மருது சகோதரர்கள் தூக்கில் இடப்பட்டனர்.
பெரிய மருதுவின் தலை காளையார்கோவிலில் சொர்ணகாளீஸ்வரர் கோவிலின்
கிழக்குப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.