இப்போது அதிகமாக அனைவரும் Laptop பயன்படுத்துகின்றன. இவ்வாறு லேப்டாப் அதிகமாக பயன்படுத்தும் போது சூடாகின்றன இந்த பிரச்சனையை சரி செய்யும் வழிமுறைகளை பார்ப்போம்.
நம்முடைய Laptop சூடாவதற்கு சுற்றுசூழல் முதல் சாப்ட்வேர் வரை காரணங்கள் உள்ளது லேப்டாப் பயணங்கள் லேப்டாப் சூடாவதை தினமும் சந்திக்கின்றோம் இதற்கு பல காரணங்கள் உள்ளது.
ஏசி அறையில் லேப்டாப் பயன்படுத்தும் போது சூடாவதை ஓரளவிற்கு கட்டுப்படுத்துகிறது.
Laptop பயன்படுத்தும் போது Chip, IC, Circuit Board போன்றவற்றில் உருவாகும் வெப்பத்தை தடுக்கும் வகையில் சிறிய வகையான மோட்டார் பேன் இயங்குகிறது. சில நேரங்களில் தூசிகள் சேர்ந்து கொண்டு வெப்ப காற்று வெளியேறும் துளைகளை அடைத்துக் கொள்ளும் இதன் காரணமாக வெப்பம் வெளியேற முடியாமல் லேப்டாப் சூடாகிறது. Laptop vacuum cleaner வாங்கி பயன்படுத்தலாம்.
லேப்டாப்பை மேசையின் மீது வைத்து பயன்படுத்தும் போது அதன் அடிப்பகுதியில் காற்று போக வழியில்லாமல் இருக்கும் இதனால் லேப்டாப் சூடாகும் தன்மை கொண்டது.
அதே போல் ஒரே நேரத்தில் பல சாப்ட்வேர், அப்ளிகேஷன் ஓப்பனாக இருக்கும் போது லேப்டாப் சூடேறும்.
லேப்டாப்பை முடிந்தவரை வெப்பம் குறைவாக இருக்கும் இடத்தில் வைத்து லேப்டாப்பை பயன்படுத்த வேண்டும்.