புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது எல்ஐசி நிறுவனம் அதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு பார்ப்போம்.
எல்ஐசி புதிய பென்ஷன் பிளஸ் திட்டம் செப்டம்பர் 5 முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த திட்டம் பங்கு சந்தையுடன் தொடர்பு இல்லாத திட்டம் ஆகும். பங்கு சந்தை ஏற்ற இறக்கங்கள் இந்த திட்டத்தில் பாதிக்காது. பென்ஷன் பிளஸ் திட்டத்தில் ஓய்வு கால சேமிப்பு நிதியை உருவாக்கலாம்.
ஒரே பிரீமியம், தொடர் பிரீமியம் என இரண்டு வகையாக மூதலீடு செய்யலாம். மாதந்தோறும் நிலையான வருமானம் பெருமகையில் நிதியை மாற்றிக் கொள்ளலாம்.
தொடர் பிரீமியம் பொருத்தவரை எவ்வளவு பிரீமியம் தொகை என்பதை பாலிசிகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் தொடர்ந்து பிரீமியம் தொகையை செலுத்தி வரலாம்.
நான்கு வகையான பிரீமியம் உள்ளது. பாலிசிதாரர் விருப்பப்பட்ட தொகையை தேர்வு செய்து முதலீடு செய்து கொள்ளலாம். ஒரு பாலிசி ஆண்டில் நான்கு முறை இலவசமாக நிதியை மாற்றிக் கொள்ளலாம்.
புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தில் முதலீடு செய்ய எல்ஐசி அலுவலகத்தில் நேரடியாக சென்று முதலீடு செய்யலாம். அல்லது ஏஜெண்ட் மூலமாக முதலீடு செய்து கொள்ளலாம்.