நாம் கடையில் வாங்கும் பால் பாக்கெட் 4 வகை கலரில் உள்ளது அவை ஊதா,
சிவப்பு, பச்சை, பிங்க் ஆகும். இவ்வாறு நான்கு வகை கலரில் பிரித்து
வைக்கப்பட்ட தன் காரணம் என்னவென்று கீழே பார்ப்போம்.
நாம் வாங்கும் பால் பாக்கெட் கலரை வைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு பால் பாக்கெட்டும் அதிலுள்ள கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்தை
பொருத்து பால் பாக்கெட் 4 கலராக பிரித்துள்ளனர்.
நாம் வாங்கும் பால் பாக்கெட்டில் Fat (கொழுப்பு) மற்றும் SNF – Solid Not Fat (கொழுப்பு
அல்ல திடமானது) என குறிப்பிடப்பட்டிருக்கும் இதைப் பொறுத்தே பால்
பாக்கெட்டின் விலை இருக்கும்.
எந்தந்த கலரில் எவ்வளவு கொழுப்பு இருக்கின்றது என்பதை நாம் பார்ப்போம்
Blue – ஊதா
Fat – 3% SNF – 8.5%
Pink
Fat – 1.5% SNF – 9%
Green – பச்சை
Fat – 4% SNF – 8.5%
RED – சிவப்பு
Fat – 6% SNF – 9%
ஊதா மற்றும் பிங்க் நிறம் கொழுப்பு குறைவாக இருக்கும் இதை சிறியோர் முதல்
பெரியோர் வரை அனைவரும் குடிக்கலாம்.
சிவப்பு பால் பாக்கெட் கொழுப்பு அதிகம் உளளதால் (Sweet) இனிப்புகள் செய்ய
அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 150 இலட்சம் பால் விற்பனையாகின்றன ஆவின்
மூலம் மட்டும் 25 லட்சம் பால் விற்பனை ஆகின்றது. ஆவினில் 23 லட்சம்
விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
பால் உற்பத்தியில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில்
உத்தரப்பிரதேச மாநிலம் பால் உற்பத்தியில் முதலாவதாக உள்ளது தமிழ்நாடு
10வது இடத்தில் உள்ளது.