நாம் பயன்படுத்தும் மொபைல் நம்பர் 10 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாம் வீட்டில் அல்லது அலுவலகத்தில் வேலை செய்யும்போது தெரியாத
நம்பரிலிருந்து நமக்கு அழைப்பு வரும். அந்த அழைப்பில் அவர்கள் ஏதேனும்
பொருளைக் குறித்து விளம்பரம் செய்வார்கள் அவ்வாறு நம்மிடம் பேசினால்
நம்முடைய மொபைல் நம்பர் விற்கப்பட்டது என நாம் தெரிந்துகொள்ளலாம்.
அவர்கள் அழைக்கும் அழைப்பில் நமக்குத் தெரியாத Service, Product மற்றும்
முதலீடு செய்வது பற்றி பேசினாள் நமது மொபைல் நம்பர் விற்கப்பட்டது என
தெரிந்துகொள்ளலாம்.
நமது மொபைல் நம்பர் எவ்வாறு விற்கப்படுகிறது.
நாம் கடையில் சென்று பொருள் வாங்கும்போது, புதிதாக சிம்கார்டு
வாங்கும்போது மற்றும் ஷாப்பிங் மால் மற்றும் ஆஃபர் பரிசு போன்ற இடங்களில்
நமக்குத் தெரியாமலே பல இடங்களில் நாம் நம்முடைய மொபைல் நம்பரை
கொடுத்திருப்போம். இதன் மூலம் நம்முடைய மொபைல் நம்பர் 10
பைசாவிலிருந்து 1 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நமக்குத் தெரியாத ஒரு
நிறுவனம் நம்மிடம் பேசும்போது உங்களுக்கு என்னுடைய நம்பர் எப்படி
கிடைத்தது என்று கேட்டாள் அதற்கு அவர்கள் எங்கள் அலுவலக Database ல்
இருந்து கிடைத்தது என்று சொல்வார்கள்.
உதாரணமாக Facebook நிறுவனம் What’s App நிறுவனத்தை 16 பில்லியன் டாலர்
கொடுத்து வாங்கியுள்ளது. இலவசமாக உள்ள what’s app ஐ Facebook வாங்க காரணம்
உதாரணமாக நாம் நம் நண்பருடன் ஏதேனும் பொருள் வாங்குவது பற்றி
உரையாடினாள் அந்தப் பொருள் அடுத்த நாள் நாம் Facebook பயன்படுத்தம் போது
விளம்பரமாக வந்து நிற்கும் இதன் மூலம் நம்முடைய டேட்டா திருடப்படுகிறது
என நாம் தெரிந்து கொள்ளலாம். ஒரு சில வலைதளங்கள் நாம் பயன்படுத்தும்
போது Accept cookies கொடுப்பது உண்டு அதனடிப்படையில் நம்மளுடைய Data
விற்பனை செய்யப்படுகிறது இதனை Data Mining என கூறுவார்கள்.
பேஸ்புக் நிறுவனம் எப்படி நம்மளுடைய Data வை விளம்பரத்துக்கு
பயன்படுத்துகிறதோ அதுபோல டெலிகாம் நிறுவனம் நம்முடைய மொபைல்
நம்பரை Marketing காக பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள
தெரியாத இடங்களில் நாம் நம்முடைய மொபைல் நம்பரை கொடுப்பதை
தவிர்க்கவும். ஏதேனும் நிறுவனம் தொலைபேசியில் அழைத்து பேசினால்
சாதாரணமாக பேசி அவர்களுடைய Data Base ல் இருந்து நம்மளுடைய மொபைல்
நம்பரை நீக்க சொல்லவும். தெரியாத மொபைல் நம்பரில் இருந்து குறுஞ்செய்தி
(website link) வந்தாள் அவற்றை நாம் நிராகரித்து விடவும். இவற்றின் மூலம் நாம்
நம்முடைய மொபைல் நம்பரை விற்பனை செய்வதை தடுக்கலாம்.