Digital பரிவர்த்தனை இப்பொழுது ஆண்ட்ராய்டு மொபைல் இல்லாதவர்களும் பட்டன் மொபைல் மூலமாக 123 மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் வசதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சாதாரண பட்டன் மொபைல் வைத்திருப்பவர்கள் 123 UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இதனை பயன்படுத்த விரும்புவோர் வங்கிக் கணக்குடன் மொபைல் நம்பரை இணைக்க வேண்டும். பின்னர் டெபிட் கார்ட் விவரங்களை பதிவேற்றம் செய்து பின் நம்பர் பதிவு செய்து கொள்ளவும் என்று அறிவித்துள்ளது.
08045163666 என்ற IVR என்னை அழைத்து பண பரிவர்த்தனையை தேர்வு செய்து தனது நண்பர்களுக்கும் மற்ற வியாபாரிகளுக்கும் பணத்தை அனுப்பும் முடியும். மற்றும் வியாபாரிகள் மொபைல் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்து பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு பட்டன் மொபைல் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.