சிவகங்கை நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளு வண்டியில் நகர மன்ற தலைவர் துரை ஆனந்த் வழங்கினார்.
சிவகங்கையில் நகராட்சிக்கு உட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் இலவச தள்ளு வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சாலையோர காய்கறி வியாபாரிகளுக்கு 15 வண்டிகள், உணவு வியாபாரிகளுக்கு 40 வண்டிகள், பூக்கடை வியாபாரிகளுக்கு 20 வண்டிகள் மற்ற வியாபாரிகளுக்கு 23 என மொத்தம் 28 இலவச தள்ளு வண்டிகள் ரூ. 84.44 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் வியாபாரிகளுக்கு தள்ளு வண்டிகளை வழங்கினார். நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், நகராட்சி பொறியாளர் பாண்டிஸ்வரி, நகர அமைப்பு அலுவலர் திலகவதி மற்றும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.