நம் உடலில் இருக்கக்கூடிய சத்துக்களில் மிகவும் முக்கியமான ஒன்று
இரும்புச்சத்து உடலில் புதிய சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கும் நாம்
சுவாசிக்கும் காற்று உடல் முழுவதும் எடுத்துச் செல்வதற்கும் மிகவும்
அவசியமான ஒன்று இரும்புச் சத்து. இரும்புச் சத்து உடலில் குறைவாக இருக்கும்
பொழுது இரத்த சோகை என  சொல்லக்கூடிய அனிமியா போன்ற பிரச்சனையால்
அவதிப்படுவார்கள். 

இரும்புச்சத்து அதிகம் உள்ள 10 உணவு வகைகள்:

  1. ஈரல்:

அசைவ உணவு வகையில் ஈரலில் அதிக வகையான இரும்புச் சத்துகள் உள்ளன.
100கி ஈரலில் 9 மி.கி இரும்புச்சத்து உள்ளது. இதில் விட்டமின் B12 வைட்டமின் A
என இரத்த உற்பத்திக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கி
இருக்கிறது. 

  1. பீன்ஸ் வகைகள்:

சோயாபீன்ஸ், கிட்னி பீன்ஸ்  மற்றும் கொண்டைக்கடலை போன்றவற்றில்
அதிகளவிலான இரும்புச் சத்து உள்ளது. 100 கி சோயாபீன்ஸ்சில் 15.7மி.கி இரும்பு
சத்து உள்ளது.

  1. கீரைகள்:

கீரைகளில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது.  குறிப்பாக அதிகம் கிடைக்க
கூடிய முருங்கைக்கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. 100 கி கீரையில்
4 மி.கி இரும்பு சத்து உள்ளது.

  1. பீட்ரூட்

100 கி பீட்ரூட்டில் 0.08 மி.கி இரும்புச்சத்து உள்ளது.  பீட்ரூட்டில் விட்டமின் சி அதிக
அளவு உள்ளது.

  1. மீன்:

மீன் வகைகளில் மத்தி மீனில் அதிக வகையான இரும்புச்சத்து உள்ளது. 100 கி
மத்திய மீனில் 2.9 மி.கி இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்தை தவிர புரதம்,
கால்சியம், மெக்னீசியம் என ஏராளமான சத்துக்கள் மீனில் அமைந்துள்ளது. 

  1. மாதுளை மற்றும் ஆப்பில்:

100 கி மாதுளை மற்றும் ஆப்பிளில்  0.03 மி.கி இரும்புச் சத்து உள்ளது. ரத்த
உற்பத்திக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் இந்த பழத்தில்
காணப்படுகின்றன. ரத்தம் குறைவாக காணப்படுகிறார்கள் காலையில் மாதுளை
அல்லது ஆப்பிளை ஜூஸ் செய்து குடித்தால் உடலில் இரத்தம் அதிகரிக்கும்.

  1. பூசனி விதைகள்: 

100 கி பூசணி விதையில் 9 மி.கி இரும்புச் சத்தும் உள்ளது. இரும்புச்சத்து
குறைவாக உள்ளவர்கள் ஒரு டம்ளர் சுடுதண்ணியில் பூசனி பவுடரை கலந்து
குடித்தால் இரும்புச்சத்து அதிகரிக்கும்.

  1. நட்ஸ் வகைகள்:

அனைத்து நட்ஸ் வகைகளிலும் இரும்புச் சத்து காணப்படுகின்றன. குறிப்பாக
பாதாம் மற்றும் வேர்க்கடலைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. 100 கி
பாதாமில் 4.8 மி.கி இரும்புச் சத்து உள்ளது. 100 கி வேர்கடலையில் 3.9 மி.கி
இரும்புச்சத்து உள்ளது.

  1. உலர் திராட்சை மற்றும் பேரீச்சை:

100 கி பேரீச்சையில் 1.2 மி.கி இரும்பு சத்து உள்ளது. 100 கி உலர் திராட்சையில் 1.8
மி.கி இரும்புச்சத்து உள்ளது. உடலுக்குத் தேவையான கால்சியம் பொட்டாசியம்
மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. 

  1. சிகப்பு அரிசி:

நாம் தினசரி சாப்பிடக் கூடிய வெள்ளை அரிசிக்கு பதிலாக சிகப்பு அரிசி
சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது 100 கிராம் சிவப்பு அரிசியில் 5.5 மில்லி
கிராம் இரும்புச்சத்து உள்ளது.

Leave a Comment

Click to Chat