நாம் வங்கியில் கணக்கு துவங்கும்போது நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு
என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. அவற்றைப் பற்றி நாம் கீழே
கான்பூர்.
சேமிப்பு கணக்கு (Saving Account):
சாதாரண மனிதர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மாத சம்பளம் வாங்கும்
நபர்கள் பயன்படுத்தும் கணக்கு சேமிப்பு கணக்கு ஆகும்.
சேமிப்பு கணக்கில்(Saving Account) தான் வீட்டுக் கடன் நகை கடன் போன்ற கடன்கள்
வாங்க முடியும்.
சேமிப்பு கணக்கு (Saving Account) துவங்கும்போது குறைந்தபட்சம் ரூபாய் 500 இருக்க
வேண்டும்.
ஒரு சில வங்கி குறைந்த பட்ச தொகை மாறுபட்டு காணப்படும்.
சேமிப்புக் கணக்கில் (Saving Account) 3 மாதத்திற்கு ஒரு முறை வருடத்திற்கு 4
முறை வங்கி கணக்கில் உள்ள தொகையைப் பொறுத்து வட்டி வழங்கப்படும்.
நடப்புக் கணக்கு (Current Account):
நடப்புக் கணக்கு (Current Account) என்பது பெரிய நிறுவனம் பயன்படுத்தும்
கணக்காகும்.
பெரிய நிறுவனம் தினசரி பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படுத்தும் கணக்கு
ஆகும்.
நடப்புக் கணக்கு (Current Account) தொடங்க நிறுவனத்தின் விவரம், பான் (Pan) கார்டு,
முகவரி அனைத்தும் கொடுத்து நிறுவனத்தின் பெயரில் கணக்குத் துவங்கலாம்.
நடப்புக் கணக்கு (Current Account) துவங்கும் போது Passbook கொடுக்க மாட்டார்கள்.
வேண்டுமென்றால் Statement எடுத்துக்கொள்ளலாம்.
நடப்புக் கணக்கில் (Current Account) வட்டி கொடுக்க மாட்டார்கள்.
நாம் ATM ல் பணம் எடுத்தால் கட்டணம் பிடிப்பார்களா:
ATM ல் ஒரு மாதத்திற்கு 5 முறை வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் அதற்கு மேல்
பணம் எடுத்தால் சேவை கட்டணம் பிடிக்கப்படும். அந்த 5 முறை நாம் எந்த ATM ல்
வேண்டுமென்றாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
Financial Transaction என்பது நாம் ATM ல் பணம் போடுவது மற்றும் எடுப்பது
போன்றவை ஆகும். Financial Transaction 5 முறைக்கு மேல் சென்றால் சேவை
கட்டணம் வசூலிப்பார்கள்.
Non – Financial Transaction என்பது பணம் சரிபார்த்தல், ரகசிய பின் மாற்றுதல், Min
Statement போன்ற காரியங்கள் இவற்றை நாம் செய்வது கணக்கில் சேராது.
இவற்றை செய்வதன் மூலம் இதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
வங்கி நமக்கு குறுஞ்செய்தி அனுப்புவதற்கு மூன்று மாதத்திற்கு ₹ 15 முதல் ₹ 20
வரை கட்டணம் வசூலிக்கும்.
செல்லுபடியாகும் பரிவர்த்தனை க்கு மட்டும் தான் கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படும். செல்லுபடியாகயத பரிவர்த்தனை கணக்கில் எடுத்து
கொள்ள மாட்டார்கள்.
நாம் எத்தனை முறை பணம் எடுத்து உள்ளோம் என்பதை வங்கி அறிக்கை மூலம்
பார்த்துக் கொள்ளலாம்.
Vendor என்கிற தனியார் நிறுவனம் தான் ATM ல் பணத்தை நிரப்புகின்றது. ஒருசில
வங்கியில் அவர்களே பணத்தை நிரப்புகின்றன.
வங்கிக்கு அருகிலுள்ள ATM ல் பணம் தீர்ந்து விட்டால் உடனே நிரப்பி
விடுவார்கள். வங்கிக்கு அருகில் இல்லாமல் மற்ற இடங்களில் உள்ள ATM ல்
பணம் தீர்ந்தால் பணம் நிரப்ப அல்லது 2 நாட்கள் வரை ஆகும்.
Delete ஆன போட்டோவை எப்படி எடுக்கலாம்?
நாம் தெரிந்தோ தெரியாமலோ நமது System, Pendrive ல் உள்ள போட்டோக்களை
Delete செய்திருக்கலாம். வைரஸ் காரணமாக நமது டேட்டா காணாமல்
போயிருக்கலாம். அவ்வாறு கானாமல் போன டேட்டாக்களை எவ்வாறு எளிய
முறையில் திரும்ப எடுக்கலாம் என பார்ப்போம்.
Tenorshare 4DDiG என்ற (Software) மென்பொருளை முதலில் நாம் நமது கணினியில்
(Download) பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த Software Mac மற்றும் (Windows)
விண்டோஸ் ஆகிய இரண்டிலும் பயன்படுத்தலாம்.
Software ஐ தரவிறக்கம் செய்தவுடன் Install செய்து கொள்ளவும். பின்பு அவற்றை
Open செய்து கொள்ளவும் நாம் எந்த ட்ரைவிலிருந்து நமது டேட்டாவை திரும்பப்
பெற விரும்புகிறோமோ அந்த டிரைவ் ஐ தேர்வு செய்து கொள்ளவும். அல்லது
பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றிலிருந்து நாம் டேட்டாவை திரும்ப
பெற விரும்பினால் அவற்றை நாம் கணினியில் கனெக்ட் செய்து திரும்ப
பெறலாம்.
நாம் நமது டேட்டாக்களை திரும்பப்பெறும் போது முதலில் ஸ்கேன் ஆகும்.
பின்னர் வீடியோ, போட்டோஸ், ஆடியோ போன்றவை தனியே காட்டும்
அவற்றில் நமக்கு எது தேவையோ அதை மட்டும் தேர்வு செய்து நாம் திரும்ப
பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு நாம் எளிய முறையில் நமது டேட்டாக்களை திரும்ப
எடுத்துக்கொள்ளலாம்.