மாதம் ரூ. 1000 சம்பளத்தில் சேமித்து வைத்தால் ரூ. 5,10,373 பெற்றுக்கொள்வது
எப்படி எனப் பார்ப்போம்.

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக தபால் நிலையத்தி்ல் 2015
ம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டது செல்வமகள் சேமிப்பு திட்டம். 

செல்வமகள் சேமிப்பு திட்டம் கணக்கு துவங்குவது எப்படி?

10 வயதுக்கு கீழே உள்ள பெண் குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்
அல்லது பாதுகாவலர் யாராவது ஒருவர் இந்த கணக்கு துவங்கலாம்.

கணக்கு துவங்கியதில் இருந்து 15 முதல் 21 ஆண்டுகள் வரை பணம் செலுத்தலாம்.

ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே துவங்க முடியும்.

ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு
துவங்கலாம்.

கணக்குத் துவங்கியதும் பாஸ் புக் (Passbook) கொடுத்துவிடுவார்கள். அந்த
குழந்தைக்கு 18 வயது முடிந்த உடன் அந்த குழந்தைகளே கணக்குகளை
பராமரித்துக் கொள்ளலாம்.

கணக்கு துவங்கும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் புகைப்படம் கொடுக்க
வேண்டும். யாருடைய பெயரில் கணக்கு துவஙகுகிறோமோ அவருடைய அப்பா
பெயரில் கணக்கு துவங்கினாள் அவருடைய புகைப்படம், அடையாளச் சான்று
மற்றும் முகவரி போன்றவை பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் இணைத்து
தபால் நிலையத்தில் கொடுக்கவேண்டும் .

கணக்கு துவங்க குறைந்தபட்சம் ரூ. 1000 (Deposit) வைப்பு நிதி செய்ய வேண்டும்.

வருடத்திற்கு அதிகபட்சமாக ரூ. 1,50,000 வரை (Deposit) பணம் சேமித்து
கொள்ளலாம்.

கணக்கு துவங்கியதில் இருந்து 15 வருடத்திற்கு நாம் பணம் செலுத்த வேண்டும்.
இரண்டு வருடம் பணம் செலுத்தி விட்டு ஒரு வருடம் பணம் செலுத்தாமல்

இருந்தால் அடுத்த வருடம் பணம் செலுத்தும்போது ரூ. 50 வட்டியுடன் செலுத்த
வேண்டும்.

நாம் செலுத்தும் தொகைக்கு ரூ. 7.60% வட்டி வீதம் வழங்கப்படுகிறது. இந்த
வட்டிகள் அனைத்தும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாறும் இதை மத்திய அரசு
தான் நிர்ணயம் செய்கிறது. நமக்கு வரும் பணத்திற்கு நாம் வரி கட்ட தேவை
இல்லை. ஒவ்வொரு மாதமும் 5ம் தேதியில் வட்டியைக் கணக்கிடுவார்கள்
ஆகையால் 4ம் தேதிக்குள் பணத்தை செலுத்தி விட்டால் நல்லது. வட்டி பணம்
அனைத்தும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி ஆண்டுதோறும் நமது கணக்கு புத்தகத்தில்
செலுத்தி விடுவார்கள்.

இந்த பணத்தை நாம் பதினெட்டு வயது முடிந்தவுடன் குழந்தையின் படிப்பு
செலவுக்காக அல்லது திருமணத்திற்காக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். படிப்பு
செலவுக்காக 50% மட்டுமே  எடுக்க முடியும். 

திருமணத்திற்காக முழு பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம் திருமணத்திற்கு 1
மாதத்திற்கு முன்பு அல்லது திருமணம் முடிந்த 3 மாதத்திற்கு பின்பு பணத்தை
எடுத்துக்கொள்ளலாம்.

இடையில் கணக்கை மூட நினைத்தால் கணக்கு துவங்கியதில் இருந்து 5
ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். கணக்கு எப்பொழுது மூட நினைத்தாலும்
அல்லது பணம் எப்பொழுது எடுக்க நினைத்தாலும் நாம் கணக்கு துவங்கிய தபால்
நிலையத்தில் சென்று சான்றிதழ்கள் அளித்து பணத்தை எடுக்கவும் கணக்கை
மூடுவும் செய்யலாம். 

மாதம் ரூ. 1000 செலுத்தினால் 21 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 5,10,373 நமக்கு
கிடைக்கும். மாதம் 2000 செலுத்தினால் 21 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 10,20,744
கிடைக்கும்.

Leave a Comment

Click to Chat