நீட் தேர்வில் மாநிலத்தில் 2-ம் இடம், சிவகங்கை மாவட்டத்தில் முதலிடம் பிடித்த உலகம்பட்டி கட்டிடத் தொழிலாளியின் மகள் அன்னபூரணிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
மாணவி அன்னபூரணி நீட் தேர்வில்
538/720 மதிப்பெண்கள் பெற்று, அரசு பள்ளி மாணவர்களில் மாநில அளவில் இரண்டாம் இடமும், சிவகங்கை மாவட்டத்தில் முதலிடமும்பெற்று, சாதனை படைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாவட்டத்தின் கடைசி ஊர் என அழைக்கும் உலகம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மட்டாங்காடு என்ற பகுதியில் வசித்துவரும் கட்டடத் தொழிலாளி முருகன். இவருக்கு வயது 45. இவரது மனைவி சித்ரா(40)
இந்தத் தம்பதியினரின் மகள் அன்னபூரணி.
இவர் உலகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்புமுதல் பன்னிரண்டாம் வகுப்புவரை படித்து, பொதுத்தேர்வில், 571/600 மதிப்பெண்கள்பெற்று, பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சிபெற்றார்.
இந்நிலையில் படிக்கும்போதே மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் படித்த அன்னபூரணிக்கு நீட் தேர்வு பயிற்சிபெற மாவட்ட ஆட்சியர் ஏற்பாட்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் மூலம் அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மருத்துவராகும் கனவோடு தீவிர பயிற்சிபெற்று நீட் தேர்வு எழுதினார்.
தமிழக அளவில் இரண்டாம் இடமும், சிவகங்கை மாவட்ட அளவில் முதலிடமும்பெற்று சாதனை படைத்த மாணவி அன்னபூரணியை மாவட்ட ஆட்சியர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் அனைவரும் பாராட்டினர்.