Six flavors

இனிப்பு:

sweet

மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை என்றால் அது இனிப்பு தான். உடலுக்கு உடனடி உற்சாகத்தை தரக்கூடிய சுவை இனிப்பு ஆகும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இனிப்பு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் சோர்வு உடல் எடை கூடுதல் போன்ற சிக்கல் உண்டாகும்.

புளிப்பு:

உணவில் மேலும் ருசி சேர்க்கும் உணவாக உள்ளது புளிப்பு ஆகும். பசியுணர்வை தூண்டுவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உணர்வு நரம்புகளை புளிப்பு வலுப்பெற செய்யும். புளிப்பு அதிகமாக சாப்பிட்டால் பற்களை பாதிக்கும் மற்றும் நெஞ்செரிச்சல், அரிப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

துவர்ப்பு:

இரத்தத்தை பெருக்க துவர்ப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வியர்வை அதிகமாக உள்ளவர்கள் துவர்ப்பு சாப்பிட்டால் வியர்வை கட்டுப்படும். இரத்தப்போக்கு குறைத்து வயிற்றுப் போக்கினை சரிசெய்யும்.

கார்ப்பு:

கார்ப்பு பசியுணர்வை தூண்டுவதற்கு பயண்படும் மற்றும் செரிமானத்துக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதிகமாக காரம் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் தோன்ற காரணமாக இருக்கலாம்.

உவர்ப்பு:

மனிதனால் தவிர்க்க முடியாத சுவை என்றால் அது உவர்ப்பு தான். உமிழ்நீரை சுரக்க செய்யும். அதுபோல மற்ற சுவைகளையும் சமன் செய்ய உவர்ப்பு பயன்படுகிறது. இவற்றை நாம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் தோல் தலர்வினை உண்டு வித்து சுருங்கி போக செய்யும்.

கசப்பு:

நாம் அதிகமாக வெறுக்கும் சுவை என்றால் அது கசப்பு தான். இவை அதிகமான நண்மைகளை கொண்டுள்ளது. காய்ச்சலை தணிக்க பயண்படும். இரத்த சுத்திகரிப்பு செய்து வேண்டாத கிருமிகளை அழிக்க கசப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Click to Chat