சிவபெருமான் கடவுளை வழிபடும் சிறப்புமிக்க தினத்தில் ஒன்றே மகாசிவராத்திரி ஆகும். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாளன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்று அனைத்து சிவாலயங்களிலும் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சிறப்பு ஆராதனை, அபிஷேக ஆராதனை போன்றவை நடத்தப்படும். சிவராத்திரி தோன்றியதற்கு பல காரணங்களை புராணங்கள் கூறுகின்றன.
காக்கும் கடவுள் திருமாலுக்கும், படைப்புக் கடவுள் பிரம்மனுக்கும் இருவரில் யார் பெரியவர் என்ற போட்டி வந்தது. ஈசன் நெருப்பு வடிவமா ஓங்கி நின்று தன்னுடைய முடியையும் தன்னுடைய அடியையும் முதலில் யார் கண்டு வருவார்களோ அவர்களே பெரியவர் என்று ஈசன் கூறினார். திருமால் அடியையும் பிரம்மன் முடியையும் தேடி சென்றனர். அவர்களால் ஈசனை கண்டுபிடிக்க முடியவில்லை. ஈசன் சிவலிங்கமாக காட்சி அளித்தார் காட்சியளித்த நாளே ‘சிவராத்திரி’ என அழைக்கப்படுகிறது.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலை இருவரும் கடைந்தனர். அவ்வாறு கடையும்போது கடலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. இந்த விஷம் உலகத்தில் உள்ள உயிர்களை அழிப்பதற்கு முன்பாக ஈசன் அந்த விஷத்தை குடித்தார். ஈசன் தங்கள் உயிர்களை காப்பாற்றின தினத்தன்று தேவர்கள் இரவு முழுவதும் பூஜை செய்து வழிபட்ட நாளே ‘சிவராத்திரி’ என அழைக்கப்படுகிறது.
பார்வதி தேவி ஒருமுறை ஈசனின் கண்களை மூடினார். அவ்வாறு மூடும்போது உலகம் இருளில் மூழ்கியது இதனால் பார்வதி ஒரு இரவில் நான்கு காலங்களிலும் ஈசனை வழிபட்டார். பார்வதி நான்கு காலங்களிலும் வழிபட்டதை தொடர்ந்து உலகத்திற்கு வெளிச்சம் வந்தது. பார்வதி பூஜித்த நாளை நினைவு படுத்தும் விதமாகவே நான்கு கால பூஜை யோடு ‘சிவராத்திரி’ கொண்டாடப்படுகிறது எனக் கூறுகின்றனர்.