நடப்பு கல்வி ஆண்டில் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்து அக்டோபர் 31 தேதிக்குள் விண்ணப்பத்தை ரத்து செய்யும் மாணவ மாணவிகளுக்கு முழு கட்டணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.

சிபி.எஸ் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தாமதம் ஆனதால் கியூட், ஜேஇஇ முதன்மை தேர்வுகளும் தாமதமாகிவிட்டன. இதன் காரணமாக மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் வரை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெற்றோர் எதிர்கொள்ளும் நிதி கஷ்டங்களை தவிர்க்கும் வகையில் அக்டோபர் 31ம் தேதி வரை மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும்.

அக்டோபர் 31 தேதிக்கு பிறகு டிசம்பர் 31 தேதிக்குள் தேர்வு செய்த படிப்பை ரத்து செய்த மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட முழு தொகையிலிருந்து செயலாக்க கட்டணமாக ரூபாய் ஆயிரம் மட்டும் எடுத்து மற்ற தொகையை முழுமையாக வழங்க வேண்டும்

Leave a Comment

Click to Chat